மரண பீதியை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக்!!! இந்தியாவுல கூட இருந்ததா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் புதுத்தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,July 09 2020]

 

சீனாவின் மங்கோலியா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை புபோனிக் பிளேக் எனப்படும் புதிய வகை வைரஸ் நோய்த்தொற்று பரவியிருப்பதாக அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஆடு மேய்க்கச் சென்ற ஒருவருக்கு இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெளிவுப் படுத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து மங்கோலியா மாகாணத்தில் இந்நோய் தொற்றுக்கான மூன்றாம் நிலை எச்சரிக்கையையும் தற்போது விடுத்து இருக்கிறன்றனர். இதனால் உலகம் முழுவதுமே ஒரு புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் அல்லாடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பன்றிகளிடையே பரவும் ஸ்பானிஷ் ஃப்ளூ எனப்படும் நோய்த்தொற்று பரவி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அதையடுத்து தற்போது புதிய தலைவலியாக புபோனிக் பிளேக் எனப்படும் நோய்த்தொற்று பற்றிய செய்திகள் மேலும் அச்சத்தை ஏற்படுத்து கின்றன.

பிளேக் நோய்த்தொற்று பொதுவாக பாக்டீரியாவால் உண்டாகிறது. சிறிய பாலூட்டி வகையான அணில், காட்டு எலி போன்ற விலங்கினங்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவால் புதிய வகை புபோனிக் நோய்த்தொற்று ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் பொதுவாக பிளேக் போன்ற நோய்த்தொற்று பரவும் என்ற தகவலை உலகச் சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் பாதிக்கப் பட்ட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி மனிதர்களுக்கும் இது நோய்த்தொற்றை உண்டாக்கும் தன்மைக் கொண்டது.

புபோனிக் பிளேக் நோய்த்தொற்றில் இரண்டு வகைகள் இருக்கின்றன. செப்டிகேமிக் பிளேக், நிமோனிக் பிளேக். பொதுவாக நோய்த்தொற்று உள்ள பாக்டீரியாக்கள் நுரையீரலைத் தாக்கும் போது நிமோனிக் பிளேக் என்ற நோய்த்தொற்றாக மாறுகிறது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதர்களிடம் மிக அரிதாகவே நோய்த்தொற்றை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

பிளேக் என்ற பாக்டீரியா நோய்த்தொற்று பல நூற்றாண்டுகளாகவே மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதன் முதலில் கி.பி. 541 இல் இது மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியதாக மருத்துவ வரலாறு கூறுகிறது. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளில் இந்நோய்த்தொற்றால் 50 மில்லியன் மக்கள் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அணில், எலி போன்ற சிறிய விலங்கினங்கள் பாக்டீரியாக்களால் பாதிக்கப் பட்டு மனிதர்களுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு இந்நோய்த்தொற்று பரவியதால் கிட்டத்தட்ட 12 மில்லியன் மக்கள் உயிரிழந்து உள்ளனர். விஞ்ஞான வளர்ச்சி அடையாத காலக்கட்டத்தில் இந்நோய்த்தொற்றால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போதைய நிலைமையில் இந்நோய்த்தொற்றை மிக எளிதாக சரிசெய்து விட முடியும் எனவும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதில் மற்றொரு ஆபத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஒருவருக்கு நோய்த்தொற்று பரவி உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் குறைந்தது 24 மணிநேரத்திலேயே மரணத்தை இது ஏற்படுத்தி விடும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் நோய்ப்பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் மற்றவர்களுக்கு பரப்பும் விகிதமும் (R-O) இந்நோய்த்தொற்றில் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஒரு நபரிடம் இருந்து ஒன்று அல்லது இரண்டு பேருக்கு பாதிக்கப்பட்ட நபர் நோயை பரப்புவதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் புபோனிக் நோய்த்தொற்றை பொருத்தவரை இந்த அளவு 5-7 ஆக இருக்கும் எனவும் ஆய்வில் கண்டுபிடித்து உள்ளனர். மனிதர்களின் மிக விரைவிலேயே பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சரியான சிகிச்சை அளிக்கப்பட வில்லை எனில் குறைந்தது 24 மணிநேரத்தில் மரணத்தையும் இது ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது.

கடந்த ஜுலை 1 ஆம் தேதி பொறுத்த அளவில் சீனாவின் கோவட் பகுதியில் 2 பேருக்கு இந்நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக அந்நாட்டின் ஜின்ஹீவா செய்தி வெளியிட்டு இருக்கிறது. 27 வயதுடைய நபர் ஆடு மேய்க்கச் சென்றபோது பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது. அவருடைய 17 வயதுடைய சகோதரருக்கும் இந்நோய்த்தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் தொடர்புடைய 146 பேர் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

மேலும் மர்மோட் இனத்தைச் சார்ந்த விலங்கினங்களில் இறைச்சியை உண்பதற்கு மங்கோலிய மாகாணத்தில் தடையும் விதிக்கப் பட்டு இருக்கிறது. இந்த தடை இந்த ஆண்டின் இறுதி வரை தொடரும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு 6 நாட்களுக்கு பிறகு காய்ச்சல், சளி, இருமல், சோர்வு, தலைவலி, வீக்கம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

புபோனிக் பிளேக்குக்கு உடனடியாகச் சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். ஒருவேளை சரியான சிகிச்சை இல்லாமல் இருந்தால் குறைந்தது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 30 – 60 விழுக்காட்டு மக்கள் உயிரிழக்க நேரிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிககை செய்கின்றனர். இந்த உயிரிழப்பு விழுக்காடு 100 விழுக்காடு அளவை எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. உடனடியான பாதிப்பு, உடனடியான மரணம், தீவிர பரவல் என புபோனிக் மிகத் தீவிரமான தன்மைகளைக் கொண்டிருப்பதால் இந்நோய்த்தொற்றை வரலாற்றில் கருப்பு மரணம் எனக் குறிப்பிடுகின்றனர்.

More News

உன் 'மாஸ்டர்'பிளான் தான் என்ன? விஜய்சேதுபதிக்கு பார்த்திபன் கேள்வி

விஜய்சேதுபதி நடித்த 'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி விஜய்சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.

'ரேகை பாக்கலையோ ரேகை': கைரேகை ஜோஸ்யகாரரால் 13 பேர்களுக்கு பரவிய கொரோனா

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்தது

போலீஸாரையே கொன்ற ரவுடிகள்: துரத்தி துரத்தி வேட்டையாடிய காவல் துறை!!! கருவறுத்த பரபரப்பு சம்பவம்!!!

கடந்த வெள்ளிக்கிழமை உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பிக்ரு பகுதியில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீஸாரை பிரபல ரவுடிகள் சுட்டுக் கொன்றனர்.

திருமணத்திற்கு பின் நாங்கள் நடிக்க கூடாதா? கேள்வி எழுப்பிய அஜித் பட நடிகை!

திருமணத்திற்குப் பின்னர் அனைத்து மாஸ் நடிகர்களும் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் பெரும்பாலான நடிகைகள் நடிப்பதில்லை

இந்த நான்கு பேர்களும் எனது தெய்வங்கள்: ரஜினிகாந்த் வீடியோ

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 90 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரை உலகில் உள்ள அனைவரும் கே பாலசந்தர்