close
Choose your channels

பல அதிபர்கள் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பாங்க போல... முகக்கவசம் அணியாததால் அபராதம்!!!

Wednesday, June 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகத்தின் மூலை முடுக்கு நாடுகள் வரையிலும் கொரோனா நோய்த்தொற்று பரவி கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தடுப்பதற்கு முறையான தடுப்பூசி, சிகிச்சை மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. இந்நிலையில் ஒட்டுமொத்த மக்களும் சமூகவிலகலை கடைபிடித்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். உலகச் சுகாதார நிறுவனம் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்தல் போன்ற வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறது. பல நாடுகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொது இடங்களில் பயணிக்கும் சில அதிபர்கள் முகக்கவசத்தை தவிர்த்தே வருகின்றனர். உலகிலேயே அதிகப் பாதிப்பை கொண்ட அமெரிக்கா இதுவரை முகக்கவசத்தை கட்டாயமாக்க வில்லை. வெறுமனே சுகாதாரத்துறை நாட்டு மக்களுக்கு பரிந்துரை செய்கிறது. அதன் அதிபர் இதுவரை முகக்கவசத்தை அணியவே இல்லை. இதுகுறித்து விமர்சனங்கள் கூட எழுப்பப் பட்டன. ஆனால் நான் அணியமாட்டேன் என்று தொடர்ந்து தனது கருத்திலேயே உறுதியாக இருக்கிறார். தொழிற்சாலைகள், கோல்ப் விளையாட்டு, தினமும் செய்தியாளர்கள் சந்திப்பு என எந்த இடத்திலும் அதிபர் ட்ரம்ப் முகக்கவசத்தை அணியவில்லை. ஆனால் நோய்த் தடுப்புக்கு ஹைட்ராக்ஸிகுளோகுயின் மருந்தை தொடர்ந்து 15 நாட்கள் எடுத்துக் கொண்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

அதிபர் ட்ரம்பைத் தவிர இந்த விவகாரத்தில் பல்கேரியா மற்றும் பிரேசில் அதிபாகள் தற்போது விமர்சனத்தில் மாட்டிக்கொண்டு இருக்கின்றனர். பல்கேரிய அதிபர் பொய்க்கோ போரிசேர்வ் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசத்தை தவிர்த்து வருகிறார் என்று அந்நாட்டில் வழக்குத் தொடரப்பட்டு இருக்கிறது. கடந்த திங்கள் கிழமையன்று ரிலா மனொஸ்டோர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தேவாலயத்திற்கு அதிபர் மற்றும் அவரது செயலாளர்கள் சென்றபோது யாரும் முகக்கவசத்தை அணியவில்லை. அவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிபருக்கு 300 லிவ்ஸ் அபாராதம் விதித்து இருக்கின்றனர். இது இந்திய மதிப்பில் ரூ.13 ஆயிரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சோனரோ பொது இடங்களுக்கு முகக்கவசத்தை அணியாமல் சென்று சிக்கலில் மாட்டியிருக்கிறார். அந்நாட்டில் இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 52 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அதிபர் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசத்தை அணியாமல் தவிர்த்து வருகிறார். இது தவறான முன்னுதாரணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும் என்ற விமர்சனம் எழுப்பப் பட்டு இருக்கிறது. இது குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசத்தை அணிந்து இருக்கவேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும். அதிபர் ஜெய்ர் போல்சோனரோ பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசத்தை அணிந்து இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் 2 ஆயிரம் ரியல்ஸ் அபராதம் விதிக்கப்படும் என உத்தவிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.30 ஆயிரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொரோனா வைரஸை அதிபர் வெறும் காய்ச்சல் என மிக துச்சமாக எண்ணியதால்தான் கொரோனா நோய்த்தொற்று பிரேசிலில் அதிகரித்து இருக்கிறது எனக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிபரே இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளலாமா என்ற விமர்சனக் கேள்வியும் அவர்மீது பல தரப்புகளில் இருந்து தொடுக்கப் படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.