பேருந்து கட்டணம் உயர்வு எவ்வளவு? ஒரு அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Saturday,January 20 2018]

தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு நேற்றிரவு அறிவித்துள்ளது. இதன்படி சாதாரண பேருந்தில் 10 கி.மீ.க்கு தற்போதைய கட்டணம் ரூ5 ஆக இருந்த நிலையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய கட்டணம் ரூ6 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.19ஆக உயர்கிறது. விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30கி.மீ.,க்கு ரூ.17ல் இருந்து ரூ.24ஆக உயர்த்தப்படுகிறது. இடைநில்லா பேருந்துகள்(புறவழிச்சாலை 30கி.மீ க்கு ரூ.18ல் இருந்து ரூ.27ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.3ல் இருந்து ரூ.5ஆக உயர்த்தப்படுகிறது.

மேலும் சாதாரணப் பேருந்துகளுக்கு 10கி.மீ.,க்கு ரூ.5ல் இருந்து ரூ.6ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் ரூ.14ல் இருந்து ரூ.23ஆக உயர்த்தப்படுகிறது. 28 நிறுத்தங்கள் கொண்ட பேருந்துகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.23ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குளிர்சாதனப் பேருந்துகளுக்கு(30 கி.மீ) ரூ.27ல் இருந்து ரூ.42ஆக உயர்த்தப்படுகிறது. வால்வோ பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.33ல் இருந்து ரூ.51ஆக உயர்கிறது. மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு அடிப்படை பயண கட்டணத்துடன் 20% கூடுதலாக வசூலிக்கப்படும். அதி சொகுசு, இடைநில்லாப் பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.21இல் இருந்து ரூ.33 ஆக உயர்த்தப்படுகிறது.. மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டண உயர்வுக்கு பின்னர் இன்று நெல்லையில் இருந்து பிற நகரங்களுக்கான கட்டணங்கள் குறித்து தற்போது பார்ப்போம்:

நெல்லை - கோவை. ரூ.335
நெல்லை - திருச்செந்தூர் ரூ.52
நெல்லை - பாபநாசம் ரூ.45
நெல்லை - தென்காசி ரூ.55
நெல்லை - மதுரை ரூ.162
நெல்லை - திருச்சி ரூ.346
நெல்லை - சென்னை. 660 வரை

இந்த திடீர் பேருந்து கட்டண உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி இயக்குனர்

சமீபத்தில் வெளியான இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவை சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' மற்றும் விக்னேஷ் சிவனின் 'தானா சேர்ந்த கூட்டம்.

கமல்ஹாசனின் அரசியலுக்கு ஆதரவு தரும் மன்னர் பரம்பரையினர்!

கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினமே தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

'தளபதி 62' படத்தில் விஜய்யின் லுக் எப்படி இருக்கும்?

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'விஜய் 62' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று நடைபெற்ற நிலையில் இன்று வெளியாகியுள்ள புகைப்படத்தில் இருந்து விஜய்யின் கெட்டப்பை ஊகிக்க முடிகிறது.

நான் திரு.விஜய் அவர்களை மதிக்கிறேன்: டுவிட்டர் பயனாளிக்கு பதிலடி கொடுத்த 'அருவி' தயாரிப்பாளர்

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து இரண்டு விஜேக்கள் பேசிய விவகாரம் திரையுலகினர்களை கொதிப்படைய செய்துள்ளது.

வைரமுத்து மீதான வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக வைரமுத்து மீது தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தன்மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வைரமுத்து மனுதாக்கல் செய்திருந்தார்