முத்தரப்பு பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு. பஸ் ஸ்டிரைக் தொடருமா?

  • IndiaGlitz, [Monday,May 15 2017]

ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பெரும்பாலான அரசு பேருந்துகள் சென்னை உள்பட தமிழகம் முழுக்க ஓடவில்லை

தனியார் பேருந்துகள், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவை ஓடினாலும் அதில் திடீர் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று சிஐடியூ, தொமுச, அரசு தரப்பு என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் ஸ்டிரைக் வாபஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் அரசு தரப்பில் இருந்து யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் பேச்சுவார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டிரைக் தொடரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலைநிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சற்று முன்னர் ஆலோசனை செய்தார். அதுமட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் அவரவர் தொகுதிக்கு சென்று நேரடியாக போக்குவரத்தை கண்காணிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று முதல் ஒருவாரத்திற்கு 40 சதவீத கட்டணச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மக்கள் ஓரளவிற்கு ஸ்டிரைக் பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளனர்.

More News

ஜூன் முதல் சமந்தாவுடன் மேஜிக் செய்யும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை மற்றும் ராஜஸ்தான் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.

உங்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது என் கனவு: அட்லி குறிப்பிடுவது யாரை?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லி, பின்னர் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். முதல் படம் கொடுத்த வெற்றியால் அவருக்கு இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது

தமிழ் மக்கள் ஏமாறுவது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான். ரஜினி பேச்சின் முழுவிபரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நேரடியாக ரசிகர்களை சந்தித்துள்ளார். இன்று திண்டுக்கல், கரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்களை சந்தித்த அவர் ரசிகர்களிடையே தனது சமீபத்திய அனுபவங்கள், அரசியலுக்கு வருவது, மற்றும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்...

'சாவித்ரி' படத்தில் சமந்தா ஜோடி இவர்தான்

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது என்றும், இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்திசுரேஷ் மற்றும் ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவுள்ளதும் தெரிந்ததே...

இந்த வருடம் நான்கு இசை விருந்துகள்: அனிருத்

கடந்த 2011ஆம் ஆண்டு தனுஷின் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், இந்த 6 வருடங்களில் மொத்தம் 14 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு மட்டுமே அவர் இசையமைத்த நான்கு படங்கள் வெளியாகவுள்ளதாக தெரிகிறது...