பெண்களைவிட ஆண்கள் கொரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர்!!! அச்சமூட்டும் புது ஆய்வு!!!

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் வெளியாகி உள்ளது. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் பாலியல் வேறுபாடுகள் இருக்கிறதா என்பதைக் குறித்து தற்போது விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, கொரோனா வைரஸ் ஒருவருக்க நோய்த்தொற்றை ஏற்படுத்தும்போது ஆண், பெண் என்ற பாலியல் வேறுபாடுகள் இருப்பதில்லை என்றும் ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவியபோதே, பரவும் தன்மையில் பாலியல் வேறுபாடுகள் காணப்படுவதாக ஜான்  ஹாப்பின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் சப்ரா க்ளீன் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அந்த ஆய்வுமுடிவில் உண்மை இருப்பதாகப் பல விஞ்ஞானிகள் கருத்துக் கூறியுள்ளனர். இத்தாலியின் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் 82% ஆண் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீவிரச் சிகிச்சை அதிகளவு தேவைப் படுவதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு மேலும் அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. அமெரிக்காவில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் ஆண்கள் அக்கறை காட்டுவதில்லை என்று வெள்ளை மாளிகைளின் நோய்க் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் டெபோரோ பிரிக்ஸ் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அமெரிக்க ஆண்கள் சுகாதாரத்தைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்கிறார்கள் எனவும் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் வரை அந்நாட்டில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள் 1.5 மில்லியனாக இருந்தது என்றும் அதில் பெண்களின் விகிதம் 56% ஆகவும் ஆண்களின் விகிதம் 44% ஆகவும் குறைந்து காணப்பட்டது. மேலும் பெண்களின் இறப்பு விகிதம் 16% ஆகவும் ஆண்களின் இறப்பு விகிதம் 23% ஆகவும் அதிகரித்து காணப்பட்டது. இந்த ஆய்வுமுடிவின் படி கொரோனா நோய்த் தொற்றால் இறக்கும் பெண்களைவிட ஆண்களின் விகிதம் அதிகரித்துக் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முறையான பரிசோதனைகள் அதிகப்படுத்தும்போது இந்த இறப்பு விகிதம் மேலும் அதிகமாகும் எனவும் மருத்துவர்கள் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதேபோல சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 44,602 கொரோனா நோயாளிகளில் 2.8% ஆண்கள் உயிரிழந்து விட்டதாகவும், பெண்களின் உயிரிழப்பு 1.7% ஆக பதிவாகியிருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் தற்போது நியூயார்க்கின் நோய்க் கட்டுப்பாட்டு மையமும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. அங்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் இறப்பு விகிதம் 39% ஆக இருக்கும்போது ஆண்களின் இறப்பு விகிதம் 71% ஆக அதிரிகத்து காணப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

அறிவியல் காரணம்

நோய் பாதிப்பால் பெண்களை விட ஆண்கள் அதிகமாக உயிரை விடுவது கொரோனாவில் மட்டுமல்ல, HIV மற்றும் Hepatitics (டெபடைடிஸ்சி) போன்ற நோயிலும் காணப்பட்டதாக விஞ்ஞானிகள் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இத்தகைய பாலியல் வேறுபாடுகள் இருப்பதற்கு காரணம் என்ன என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இனப்பெருக்க அடிப்படையில் ஆண்களைவிட பெண்கள் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருக்கின்றனர். இனப் பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் டெட்ஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் அவர்களின் உடலில் அதிகளவு காணப்படுகிறது. இயல்பிலேயே இந்த ஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் தன்மைக் கொண்டவை. இந்தக் காரணத்தால்தான் கொரோனா நோயால் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று நோயின் பாதிப்பில் இருந்து மீண்டுவர முடிகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் பெண்களின் உடலில் இரண்டு X குரோமோசோம்கள் காணப்படுகிறது. இந்த X குரோமோசோம் என்பது அடிப்படையில் நோய் எதிர்ப்பு மரபணுக்களை உண்டு பண்ணக்கூடிய ஆற்றல் கொண்டவை. ஆனால் ஆண்களின் உடலில் ஒரு X குரோமோசோம் மற்றும் ஒரு Y குரோமோசோம் மட்டுமே இருக்கிறது. இந்தக் காரணங்களால்தான் ஆண்களை விட பெண்களுக்கு இரட்டை பாதுகாப்பு இருப்பதாகத் தற்போது ஆய்வுலகம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. பெண்களின் உடலில் அமைதியாக இருக்கும் X குரோமோசோம்கள் நோய்த்தொற்று ஏற்படும்போது அவற்றிற்கு எதிராக ஆண்களைவிட 10 மடங்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு ஆற்றலை உண்டுபண்ணி அவர்களை காப்பாற்றி விடுவதாகவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, இருதய நோய் கோளாறு, புகைப்பழக்கம், ஆஸ்துமோ போன்ற பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு புதிய நோய்த்தொற்று மேலும் அதிக  பாதிப்பைக் கொடுக்கும் எனக் கூறப்பட்டது. அத்தகைய காரணங்களைப் போன்று தற்போது ஆண்களாக இருப்பதும் அதிக ஆபத்தாக விஞ்ஞான உலகம் அச்சம் தெரிவித்து இருக்கிறது. 

More News

ஒரு குடும்பத்தின் 11 பெண்களை ஒரே ஒரு போன்காலில் காப்பாற்றிய தளபதி விஜய்

சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தூத்துக்குடியில் 40 நாட்கள் தவித்து வந்த நிலையில் ஒரே ஒரு போன்காலில் அந்த 11 பெண்களையும் காப்பாற்றிய தளபதி விஜய்

10ஆம் வகுப்பு தேர்வு தேதி மற்றும் அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்

சம்பளம் போட பணமில்லை: பெருமாளுக்கே வந்த பெருஞ்சோதனை

உலகிலேயே மிக அதிக வருமானம் உள்ள கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்ற தகவல் வெளியே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

50% சம்பளத்தை குறைக்க தயார்: பிக்பாஸ் நடிகர் அறிவிப்பு 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு 70 ஆயிரமாக உயர்வு: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 67,152ஆக இருந்த நிலையில் சற்றுமுன் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி