ஒரு குழந்தையின் உயிரைக் காக்க 16 கோடி ரூபாய் மருந்து! ஜிஎஸ்டி விலக்கு அளித்த பிரதமர் மோடி!

மும்பையில் பிறந்த ஒரு 5 மாதக் குழந்தைக்கு விசித்திரமான ஜெனடிக் நோய் ஏற்பட்டு இருக்கிறது. இந்நோய்க்கான சிகிச்சை மருந்து மட்டும் இந்திய மதிப்பில் ரூ.16 கோடி எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும்போது அதற்கான இறக்குமதி வரி மற்றும் 12% ஜிஎஸ்டி வரியைச் சேர்த்தால் மேலும் 6 கோடி ரூபாய் செலவு ஆகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஹாராஷ்டிராவின் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இக்குழந்தையின் பெற்றோர் பிரியங்கா மற்றும் மஹிர் தற்போது சமூக வலைத்தளம் மூலமாக கிரவுண்ட் பண்டிங் செய்து வருகின்றனர். இதுவரை 12 கோடியை வசூலித்து உள்ள நிலையில் பிரியங்கா மற்றும் மஹிர் ஆகிய இருவரும் சமூக வலைத்தளத்தில் வரியை குறைக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தனர்.

மேலும் இவர்கள் டிவிட்டரில் பிரதமர் மோடியை டேக் செய்து தன்னுடைய குழந்தையின் மரபணு சிகிச்சை குறித்தும், இது உயிர்க்காக்கும் மருந்து என்ற நிலையில் இல்லாததால் வரி விதிக்கப்படுவது குறித்தும் பதிவிட்டு உள்ளனர். இந்தப் பதிவை பார்த்த பிரதமர் மோடி குழந்தை டீராவிற்கு உதவ முன்வந்துள்ளார். இதனால் தற்போது ரூ.16 கோடி மதிப்பிலான உயிர்க்காக்கும் மருந்திற்கு அனைத்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.