துரோகி அணியில் பாண்டியராஜன். சி.ஆர்.சரஸ்வதி ஆவேசம்

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

அதிமுகவின் மூத்த அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகளே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அவரது ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் தோல்வி அடைந்து மக்களால் ஒதுக்கப்பட்ட சி.ஆர்.சரஸ்வதி, முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறி வருபவர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து வருகிறார்.

ஏற்கனவே ஓபிஎஸ் முதல் அவரது அணிக்கு மாறிய மூத்த தலைவர்கள் அனைவரையும் விமர்சனம் செய்து வரும் சி.ஆர்.சரஸ்வதி, தற்போது இன்று ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களையும் விமர்சனம் செய்துள்ளார்.

கட்சிக்கு துரோகம் செய்யும் அணியில் பாண்டியராஜன் இணைந்துள்ளதாகவும், இவரை போன்றவர்களின் துரோகச் செயல்களால் அதிமுகவை உடைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தள பயனாளிகளால் மிக அதிகமான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருபவர் சி.ஆர்.சரஸ்வதி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆட்சி அமைக்கும் எண்ணிக்கையை நெருங்கியது ஓபிஎஸ் அணி. மேலும் 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சமீபத்தில் மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தன்னந்தனியாக தொடங்கிய போராட்டம் தற்போது ஆச்சரியப்படும் வகையில் வலுபெற்று கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது...

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக மூத்த அமைச்சர்

தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் ஓட்டுமொத்தமாக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் ஒருசில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டுள்ள சசிகலா, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதை தமிழக மக்கள் ஒரு வெறுப்புடனே பார்த்து வருகின்றனர்...

கூவத்தூரில் சசிகலா சிறைவைப்பா? பொதுமக்கள் கொந்தளிப்பு

சென்னை ஈசிஆர் அருகே உள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்ட் ஒன்றில் கடந்த நான்கு நாட்களாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டை சுற்றிலும் சசிகலாவின் ஆட்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களது அட்டூழியதால் அப்பகுதி கிராமத்து மக்கள் பெரும் பாதிப்பு அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது...

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உண்ணாவிரதமா? சென்னையில் பரபரப்பு

தமிழகத்தை ஆட்சி செய்வது யார் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஆளுனர் வித்யாசாகர் ராவ், சென்னை வந்து இரண்டு நாட்கள் ஆகியும் எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளார். நேற்று அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்பட்டது...

சென்னையில் சுப்பிரமணியன் சுவாமி. ஆளுனரை சந்திக்கின்றாரா?

தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை வந்துள்ளார்...