வெளிமாநிலங்களில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. சி.ஆர்.சரஸ்வதி

  • IndiaGlitz, [Monday,February 20 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இதில் சசிகலா அணியின் ஆதரவாளராக மாறிய சி.ஆர்.சரஸ்வதி அவ்வப்போது தனது கருத்துக்களை தொலைக்காட்சி பேட்டி வழியாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றார்.

இந்நிலையில் இன்று அவர் சென்னை கமிஷனர் அலுவகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் இரவு 10 மணிக்கு மேல் தனக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் போன் மூலம் மிரட்டல் வருவதாகவும், அதில் தன்னை ஆபாச வார்த்தைகளால் மர்ம நபர்கள் திட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதேபோன்ற மிரட்டல் போன்கள் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, மற்றும் நடிகை விஜயசாந்தி ஆகியோருக்கும் வருவதாகவும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

More News

கமலுடன் இணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் தற்கால சமூக, அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார்

கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். போலீஸ் புகார் செய்த அரசியல் கட்சி

தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமல்ஹாசன் நடந்து கொள்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'. ஃபர்ஸ்ட்லுக், ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில் 'வேலைக்காரன்' என சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சசிகலா தியாகி, ஓபிஎஸ் துரோகியா? விஜயசாந்திக்கு கடும் கண்டனம்

தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஜனநாயக கேலிக்கூத்து அனைவரும் அறிந்ததே.

ஐபிஎல் வீரர்கள் ஏலம். ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்.

10வது ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தொடங்கவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த ஐபிஎல் போட்டியில் எட்டு அணிகள் மோதுகின்றன.