'தர்பார்' விவகாரம்: ஒருவர் திடீர் கைது

  • IndiaGlitz, [Tuesday,January 14 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி நான்கே நாட்களில் ரூபாய் 150 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் இந்த படத்தை ஓடவிடாமல் செய்ய ஒரு சிலர் குறுக்கு வழியில் முயற்சித்து வருகின்றனர். கேபிள் டிவியில் ஒளிபரப்பியும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக ஒளிபரப்பியும் செய்து கொண்டிருக்கும் சிலர் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்

இந்த நிலையில் மதுரையில் நேற்று தர்பார் திரைப்படம் கேபிள் டிவியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய தகவல்கள் வெளிவந்தது. இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் தற்போது கேபிள் டிவியில் ஒளிபரப்பிய லோக்கல் சேனல் உரிமையாளர் மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

நான் இந்தியன். இதை எப்படி நிரூபிப்பேன்..?! என் குழந்தைகள் என்னாகும்..?! பயணியிடம் அழுத முஸ்லீம் ஓட்டுநர்..! வீடியோ.

"என் குழந்தைகளுக்காக கஷ்டப்பட்டு, அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறேன். என் தந்தை காலமானார், என் தாத்தாவும் இல்லை. நான் உ.பி.யைச் சேர்ந்தவன், எந்த நிலமும் இல்லை. நான் என்ன ஆதாரம் தருவேன்? ”

30 வருடங்களுக்கு முந்தைய ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்ய ஆசை: தனுஷ்!

ரஜினிகாந்த் நடித்த பில்லா உள்பட ஒரு சில திரைப்படங்கள் ஏற்கனவே ரீமேக்காகி வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது 30 வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த் இரண்டு வித்தியாசமான

யாருடனும் டேட்டிங் செல்ல தயார்: பிக்பாஸ் நடிகையின் அதிரடி பதில்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன், அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் உடன்,

தேன் 'நிலவு' செல்ல 20 வயது பெண் தேவை: தொழிலதிபரின் விளம்பரத்தால் பரபரப்பு!

தேனிலவு செல்ல 20 வயதுக்கு மேற்பட்ட இளம்பெண் தேவை என தொழிலதிபர் ஒருவர் விளம்பரம் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

போனிகபூர் வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: தனுஷ் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' என்ற திரைப்படத்தைத் தயாரித்தார் என்பதும் அந்தத் திரைப்படம் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்து என்பதும் தெரிந்ததே.