close
Choose your channels

Cadbury Chocolate ஆல் நோய்த்தொற்றா? புதிய எச்சரிக்கையால் இங்கிலாந்தில் பரபரப்பு!

Wednesday, May 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இங்கிலாந்து முழுவதும் கேட்பரி நிறுவனத்தின் பல இனிப்பு வகைகள் அந்நிறுவனத்தால் திரும்பப் பெறப்பட்டு உள்ளன. மேலும் இந்த வகை இனிப்புகளைச் சாப்பிட வேண்டாம் என்றும் மக்கள் மத்தியில் எச்சரிக்கப்பட்டு இருப்பதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற இனிப்புகளில் ஒன்று கேட்பரி நிறுவனத்தின் சாக்லேட்டுகள். இது பல அளவுகளில் வெவ்வேறு சுவையோடு விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேட்பரி நிறுவனத்தின் 75 கிராம் சாக்லேட்டுகளின் மூலம் லிஸ்டீரியோசிஸ் எனப்படும் பாக்டீரியா நோய்த்தொற்று தாக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறி அந்நிறுவனம் இங்கிலாந்து கடைகளில் இருந்து தங்களது இனிப்பு வகைகளை திரும்பப் பெற்றுள்ளது.

மேலும் கேட்பரி இனிப்பு வகைகளில் இருந்து கேட்பரி கிரஞ்சி, கேட்பரி டைம், கேட்பரி ஃப்ளாக், கேட்பரி டெய்ரி மில்க் பட்டன்ஸ், டெய்ரி மில்க் சங்க்ஸ் ஆகிய இனிப்புகளையும் அந்நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து யாரேனும் கடைகளில் இந்த வகை இனிப்புகளை வாங்கியிருந்தால் மீண்டும் அதைக் கடைகளில் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாக சாக்லேட்டுகளைச் சாப்பிட வேண்டாம் என்று இங்கிலாந்தில் எச்சரிக்கை செய்திருப்பதால் மக்கள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

லிஸ்டீரியோசிஸ் என்பது லிஸ்டீரியா மோனோசைட் டோஜென்ஸ் எனும் கிருமியால் ஏற்படும் தீவிரநோய்த்தொற்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகை தொற்றுள்ள உணவுகளைச் சாப்பிட்ட பிறகு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. அதிலும் கர்ப்பிணி பெண்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள், வயதானவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களுக்கு இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டில் கேட்பரி நிறுவனத்தின் சாக்லேட்டுகளில் நோய்த்தொற்று பாதிப்புக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறி திரும்பப் பெறப்பட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில் இந்தியாவிலும் இதுபோன்ற தொற்றுகள் ஏற்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.