கணவர் தற்கொலை, 7,200 கோடி கடன்… தனி மனுஷியாக சாதித்த மாளவிகா ஹெக்டே!

  • IndiaGlitz, [Wednesday,January 12 2022]

இந்தியா முழுக்க தனது கடைகளைப் பரப்பி கொண்டிருக்கும் Café Coffee day நிறுவனத்தின் தலைவர் கடந்த 2019 ஜுலை 29 ஆம் தேதி ஆற்றில் குதித்து திடீரென தற்கொலை செய்துகொண்டார். கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டது.

இதையடுத்து இந்த நிறுவனத்தின் எதிர்காலம் என்ன? 7,200 கோடிக் கடனை யார் அடைப்பது? இந்த நிறுவனத்தை நம்பியிருக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் தலையெழுத்து என்ன? என்று பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே வருடத்தில் முற்றுப்புள்ளி வைத்திருப்பவர்தான் மாளவிகா ஹெக்டே.

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களோடு போட்டிப்போட்டு வளர்ந்த நிறுவனம் காபி டே. இதை ஆரம்பித்தவர் V.G.சித்தார்த்தா. இந்தியா முழுக்க 165 நகரங்களில் 575 கடைகளை பரப்பி வளர்ந்த இந்த நிறுவனத்தை மேலும் வளர்க்க நினைத்த சித்தார்த்தா ஒரு கட்டத்தில் கடன் தொல்லை தாங்காமல் மங்களூருவில் உள்ள நேத்ரா நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கு காரணம் சித்தார்த்தா தனது நிறுவனத்தின் பங்குகளை விட அதிகக் கடனை வாங்கியிருந்ததாகவும் இதனால் முதலீட்டாளர்களின் அழுத்தம் மற்றும் வருமான வரித்துறையினரின் அழுத்தம் காரணமாக மன உளைச்சலில் தவித்துவந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

இதனால் காபி டே கடைக்காரர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் எனப்பலரும் இந்தியா முழுக்க கடும் அதிர்ச்சியை வெளியிட்டனர். மேலும் அந்த நிறுவனத்தின் கடன் தொகை காரணமாகப் பலரும் காபி டே நிறுவனத்தின் மீது அதிருப்தி அடைந்திருந்தனர். இதையடுத்து மார்ச் 31, 2019 இன் கணக்குப் படி காபி டே நிறுவனத்திற்கு 7,200 கோடி கடன் இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில் கணவனை இழந்து கடும் சோகத்தில் இருந்துவந்த சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே ஒரு அசாதாரணமான முடிவை எடுக்கிறார். இதனால் கடந்த 2020 டிசம்பரில் காபி டே நிறுவனத்தின் செயல் தலைவராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். மேலும் ஒரே வருடத்தில் அவர் நிறுவனத்தின் கடன் தொகையை தற்போது பெரும் அளவிற்கு குறைத்தும் இருக்கிறார்.

மறைந்த சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா காபி டே நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு திறமையாக செயல்பட்டு தற்போது மார்ச் 31 2021 கணக்குப்படி அந்த நிறுவனத்தின் கடன் தொகையை 1,731 கோடியாக குறைத்திருக்கிறார். இந்தத் தகவல்தான் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

7,200 கோடி கடனில் தவித்துவந்த காபி டே நிறுவனம் தற்போது மாளவிகாவின் திறமையான செயல்பாட்டால் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. மேலும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது முதலீட்டை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ள முடிந்திருக்கிறது. கணவரது இழப்பை கடந்து இத்தனையும் செய்துமுடிந்த மாளவிகா ஹெக்டே கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் என்பதும் தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

அருமையான பயணம் இது… சொந்த அண்ணனை வாழ்த்திய நடிகர் ஜெயம்ரவி!

சினிமா உலகில் எடிட்டரும் தயாரிப்பாளருமாக வெற்றிகரமான பயணத்தை கொண்டிருந்தவர் மோகன். இவரது

இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு 70 வயதா? ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய ஒரு புகைப்படம்!

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம்வரும் நடிகர்

ஐபிஎல்-இல் அதிகச் சம்பளம் வாங்கிய முன்னணி வீரர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் 16.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் அனைத்துவித கிரிக்கெட்

பன்றியின் இதயம் மனிதனுக்கு பொருத்தப்பட்டதா? மருத்துவ உலகில் புது திருப்பம்!

அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைக்கு கொரோனா பாதிப்பு!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகின்