ஏற்றுமதி செய்யப்பட்ட “எருமை“ இறைச்சியில் கொரோனா தாக்கம்? தொடரும் சிக்கல்!

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

இந்தியாவில் இருந்து கம்போடியாவிற்கு 5 கப்பல் கண்டெய்னர்களில் “நீர் எருமை” இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இறைச்சியில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக சீனாவில் இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் தங்கி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் பெய்ஜிங் மாகாணத்தில் உள்ள பல்வேறு நகரங்களில், பொதுமக்கள் வாரக்கணக்காக கோழி இறைச்சியை தவிர்த்து வந்தனர். அடுத்து இறக்குமதி செய்யப்பட்ட மீன் இறைச்சியிலும் கொரோனா வைரஸ் இருப்பதை சீன அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சாலமன் மீனுக்கு அந்நாடு சில மாதம் வரை தடை செய்திருந்தது.

அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நீர் எருமை இறைச்சியில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதை அந்நாட்டு சுகாதாரத்துறை கண்டுபிடித்து உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் உள்ள அந்த இறைச்சியை அதிகாரிகள் அழித்துவிடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

மனிதர்களிடம் அதிகளவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை ஒரு விலங்குகளைத் தாக்கி இருக்கிறது. ஆனால் கொல்லப்பட்ட இறைச்சியிலும் இந்தக் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது தற்போது விஞ்ஞானிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News

பிரபல நடிகரின் 2வது மனைவி அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்: என்ன காரணம்?

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் ஒருவரின் இரண்டாவது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிகினி உடையால் ஒலிம்பிக் போட்டியில் வெடித்த சர்ச்சை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் போட்டிக்காக தங்களுக்கு

"நடிப்பின் இலக்கணம்" தனுஷ்-ற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!

தமிழ் சினிமா முதல் பாலிவுட் வரை தன்னுடைய உழைப்பால் நடிப்பில் கொடி கட்டிப்பறக்கும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். ஜூலை-28-ஆன இன்று தனுஷ் தன்னுடைய 38-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து மருத்துவக்குழு முக்கியப் பரிந்துரை!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பெருமளவிற்கு தணிந்து இருக்கிறது.

இந்திய நகரத்துக்கு யுனெஸ்கோ சிறப்பு அந்தஸ்து…. அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஐ.நா.வின் காலச்சார அமைப்பான யுனெஸ்கோ குஜராத் பகுதியில் உள்ள “தோலவிரா“ எனும் நகரத்திற்கு சிறப்பு