பிரச்சாரம் செய்ய ஆளில்லாமல் தவித்த வேட்பாளர்...!கைகொடுத்தது நம்ம சித்தி தான்....!

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

விருதுநகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம்- சமக சார்பாக களமிறங்கும் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய ஆளில்லாமல் தவித்து வருகிறாராம்.

தமிழகத்தில் தேர்தலுக்காக பிரச்சார களங்கள் அனல் தெறித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் போட்டியில் வெகுவாக முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் மநீம - சமக கூட்டணியில், விருதுநகர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பாக மணிமாறன் களமிறங்குகிறார். ஆனால் இவர் சார்பாக தொகுதியில் பரப்புரை செய்ய பேச்சாளர்கள் யாரும் வரவில்லை. தொகுதி விட்டுக்கொடுத்த காரணத்தால் மநீம சார்பாகவும் யாரும் செல்லவில்லை. சொந்த கட்சியினரும் செல்லாததால், மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்.

அருப்புக்கோட்டையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, இவருக்காக பேசலாம் என முடிவெடுத்தார் கமலஹாசன். கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, தொகுதியை அவர்களுக்கு கொடுத்ததால் கட்சியில் யாரும் வேலை செய்ய முன்வரவில்லை. நீங்கள் போக வேண்டாம், அங்கு கூட்டம் கூடாது என்று சொல்லிவிட்டார்களாம். இதனால் கமலும் விலகிக் கொண்டாராம். இறுதியாக நடிகை மற்றும் சமக துணை பொதுச்செயலாளரான ராதிகா சரத்குமார் அவருக்காக பிரச்சாரத்தை மேற்கொண்டாராம். அதன்பின்பு மணிமாறன் தொகுதியில் தென்படாமல் இருக்கிறார் என்ற செய்தியும் கசிந்துள்ளது.

More News

50 வருடம் கழித்து காதலருக்கு கடிதம் எழுதிய ஆஸ்திரேலியப் பெண்… 82 வயதிலும் மங்காத காதல் கதை!

பல வடமாநிலங்களில் பேய் கிராமம் என்ற பெயரோடு இன்றைக்கும் ஆள்அரவம் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை பலமுறை செய்தித்தாள்களில் படித்து இருப்போம்.

மணப்பெண் தேடித்தருமாறு போலீசில் புகார் அளித்த இளைஞர்… பரபரப்பு சம்பவம்!

திருமணத்திற்கு பொருத்தமான பெண்ணைத் தேடித்தருமாறு உத்திரப்பிரதேச மாநில இளைஞர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்து இருப்பதும் கடும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது

பிகினி உடையுடன் ஊஞ்சல் ஆடும் ராய்லட்சுமி… வைரல் புகைப்படம்!

தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “கற்ககசடற” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ராய்லட்சுமி.

அண்டை மாநிலத்தில் தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி: தமிழகத்தில் எப்போது?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இதுதான் என் முகவரி, தைரியம் இருந்தால் ரெய்டு நடத்துங்கள்: உதயநிதி சவால்

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதல் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை உள்பட பலரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்