close
Choose your channels

'கேப்டன் மில்லர்' படத்தின் முக்கிய பணிகள் தொடக்கம்.. ரிலீஸ் எப்போது?

Sunday, September 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தனுஷ் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இருப்பினும் மற்ற காட்சிகளின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாக தெரிகிறது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் தொழில்நுட்ப பணிகள் முடிந்த பிறகு புரமோஷன் பணியை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக இன்னும் சில நாட்களில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சிவராஜ்குமார் நடித்துள்ளார் என்பதும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.