உன் வெளிச்சத்திலே என் இருள் புரியுதே: 'கேப்டன் மில்லர்' படத்தின் 2வது சிங்கிள்

  • IndiaGlitz, [Saturday,December 23 2023]

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் சீன் ரோல்டன் பாடிய இந்த பாடலை கபீர் வாசுகி எழுதியுள்ளார் என்பதும் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த மெலோடி பாடல் முதல் முறை கேட்கும்போதே மனதை கவரும் வகையில் உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் அசத்தலான வரிகள் இதோ:

உன் ஒளியிலே என் நிழல் விரியுதெ
உன் வெளிச்சத்திலே என் இருள் புரியுதே

சில கோணத்தில் சதி ஆகுதே
நீதி விதிபோல் விளையாடுதே
சில நேரத்தில் பழியாகுதே
இதயம் கிழித்து வில பேசுதே
உன் கருணையில் என் வெறி தெரியுதே
உன் அருகிலே ஆறுதல் இயலுதே

ஆறாத காயங்கள் கரம் போகுதே
மாறாத சாயங்கள் மனம் ஏற்குதே
போகாத தூரங்கள் என்னை ஈர்க்குதே
துண்டித்த காத்தாடி நான்

உன் ஒளியிலே என் நிழல் விரியுதெ
உன் வெளிச்சத்திலே என் இருள் புரியுதே

More News

ரூ.200 கோடியை நெருங்கிய 'சலார்' படத்தின் முதல் நாள் வசூல்.. திரையுலகினர் ஆச்சரியம்..!

பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படம் நேற்று வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 'கேஜிஎப்' மற்றும் 'கேஜிஎப் 2' ஆகிய  இரண்டு உலக புகழ் பெற்ற சூப்பர் ஹிட் படங்களை

கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலே சாவு.. அருண்ராஜா காமராஜின் 'லேபிள்' இந்த வார எபிசோடு..!

பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவான 'லேபிள்' என்ற வெப் சீரியல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

'நம்பாதேங்கிறத விட சாயாதே' என்பது தான் கரெக்ட்.. கமல்ஹாசன் கூறிய அறிவுரை யாருக்கு?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 83 வது நாளாக இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் உறவினர்களின்

22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 3 தமிழ் படங்கள்.. என்னென்ன தெரியுமா?

சென்னையில் சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்ற நிலையில் அதில் பல திரைப்படங்கள் திரையிடப்பட்டன என்பதும்  அவை ரசிகர்களால் ரசித்து பார்க்கப்பட்டன

கார் சேஸிங் த்ரில்லிங் காட்சி .. ட்ரோன் கேமராவில் படப்பிடிப்பு.. த்ரிஷா வெளியிட்ட வைரல் வீடியோ ..!

 கார் சேஸிங் காட்சியில் நடிகை  த்ரிஷா நடித்துள்ள வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது