close
Choose your channels

'கேப்டன் மில்லர்' போர்க்காட்சிகளின் வீடியோ லீக்? அதிர்ச்சியில் படக்குழுவினர்..!

Sunday, March 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே உள்ள காடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த காடுகளில் போர் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் போர் காட்சிகளின் படப்பிடிப்பை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்போது நீக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் யாரும் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

தற்போது ’கேப்டன் மில்லன்’ படத்தின் கிளைமாக்ஸ் போர் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.