close
Choose your channels

பிரதமர் மோடிக்கு கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து!

Thursday, May 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக மீண்டும் பதவியேற்க தனது வாழ்த்துக்கள் என தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையோடு இரண்டாம் முறை பாரத பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் பெற்று போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட முன்னணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos