close
Choose your channels

சென்னை திரும்பும் விஜயகாந்த்: சுறுசுறுப்பாகும் தேமுதிக தொண்டர்கள்

Thursday, February 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை அமெரிக்காவில் இருந்து கொண்டே தமிழக மக்களுக்கு கூறி வந்தார். இந்த நிலையில் அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் அவரது மகன் பிரபாகரன் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை திரும்பும் கேப்டனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தேமுதிக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையை தேமுதிகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் நடத்தி வரும் நிலையில் விஜயகாந்த் சென்னை திரும்பியவுடன் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.