கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அடுத்த படம்.. முக்கிய அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,August 24 2023]

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் மூன்றாவது படத்தின் முக்கிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’சகாப்தம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதனை அடுத்து அவர் 2018 ஆம் ஆண்டு வெளியான ’மதுரவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். பிஜி முத்தையா இயக்கத்தில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சண்முக பாண்டியன் எந்த படத்தில் நடிக்காத நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை அன்பு என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வீடியோ நாளை வெளியாகிறது. நீண்ட நாட்களாக ரசிகர்கள் முன் தோன்றாத விஜயகாந்த் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்தது என்பது அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜீ5 ஒரிஜினல்: அனுராக் காஷ்யப், நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்த 'ஹட்டி'.. டிரைலர் ரிலீஸ்..!

ZEE5 ஒரிஜினல், இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா 'ஹட்டி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அந்த நிலாவத்தான் நாம கையில புடிச்சோம்.. தனது பாடலை வைத்தே இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வைரமுத்து வாழ்த்து..!

'அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்' என்ற பாடலை கவியரசு வைரமுத்து, சிவாஜி கணேசன் நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' என்ற படத்திற்காக எழுதினார். 

உலகமே கொண்டாடும் 'சந்திராயன் 3' வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கமல், ரஜினி வாழ்த்து..!

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3 என்ற விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது என்பதும்  விக்ரம் லேண்டரில் இருந்து  பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவை ஆய்வு செய்து வருகிறது என்று

போலீஸ் மேலேயே கைவச்சிட்டியா... சுரேஷ் காமாட்சியின் 'நூடுல்ஸ்' டிரைலர்..!

சிம்புவின் 'மாநாடு' உள்பட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான அடுத்த திரைப்படம் 'நூடுல்ஸ்'. இந்த படம்  வரும் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ்

தப்பு யார் செஞ்சிருந்தாலும் அவங்க தப்பானவங்க தான்.. விமலின் 'துடிக்கும் கரங்கள்' டிரைலர்..!

விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.