'கேப்டன்' மறைந்த சோகம்.. மனதை தேற்றி கொண்டு மீண்டும் களத்தில் இறங்கிய  சண்முக பாண்டியன்..!

  • IndiaGlitz, [Saturday,February 17 2024]

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது மகன் சண்முக பாண்டியன் தந்தை மறைவை அடுத்து மனதை தேற்றிக்கொண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேப்டன் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் ’படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை மற்றும் மறைவு காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தந்தை மறைவை அடுத்து சோகத்தில் இருந்த சண்முக பாண்டியன் தற்போது மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவரே தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

’படைத்தலைவன்’ படம் மட்டுமின்றி ’குற்றப்பரம்பரை’ என்ற வெப் தொடரிலும் சண்முக பாண்டியன் நடித்து வருவதாகவும் அதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

More News

சென்னை கல்லூரியில் திடீர் விசிட் அடித்த சமந்தா.. மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு..!

நடிகை சமந்தா சென்னையில் உள்ள கல்லூரிக்கு திடீர் விசிட் அடித்த நிலையில் மாணவ மாணவிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

'தலைவர் 171' படப்பிடிப்பு எப்போது? 'லியோ 2' உருவாகுமா? லோகேஷ் கொடுத்த அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'தலைவர் 171' படத்தின் படப்பிடிப்பு எப்போது மற்றும் விஜய்யின் 'லியோ 2' உருவாகுமா? ஆகிய கேள்விகளுக்கு இன்று நடந்த நிகழ்ச்சியின் போது லோகேஷ் கனகராஜ் அப்டேட்

ஸ்பெஷல் பிரியாணியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. யாருடன் தெரியுமா?

இன்று நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து

19 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. பிரபல நடிகருக்கு மகளாக நடித்தவர்..!

பிரபல நடிகருக்கு மகளாக நடித்த 19 வயது நடிகை திடீரென மரணம் அடைந்ததை அடுத்து திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

நிதி ஒதுக்கி, குழுக்கள் அமைத்தாலும் மேகதாதுவில் எந்த காலத்திலும் அணைக்கட்ட முடியாது: துரைமுருகன் திட்டவட்டம்

மேகதாதுவில் எந்த காலத்திலும் கர்நாடகா அணைக்கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.