டெல்லி போராட்டம்… ஆதரவு தெரிவித்து கனடாவில் பேரணி!!!

  • IndiaGlitz, [Friday,December 04 2020]

 

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாநிலங்களில் கடந்த 9 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள், கொலம்பியா மாகாணம் பகுதியில் கார் பேரணி ஒன்றை நடத்தினர். இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான கார்கள் கலந்து கொண்டு லோயர் மெயின்லேண்டின் சர்ரே பகுதியில் இருந்து வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.

பஞ்சாப், ஹரியாணா, ஒரிசா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறுமாறு கடந்த சில தினங்களாக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில், சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரைக் கூட்டி மத்திய அரசு புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்று முன்தினம் மத்திய வோளாண் துறை அமைச்சர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் இந்தப் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து 34 விவசாயச் சங்கத் தலைவர்களுடான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அந்தப் பேச்சு வார்த்தை இன்று நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல வடமாநிலங்களில் புதிய வோளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடா பிரதமரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தார். இதையடுத்து அங்குள்ள இந்தியர்கள் தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவிக்கும் வகையில் கார் பேரணி ஒன்றை நடத்தி இருக்கின்றனர். அந்தப் பேரணியில் கனட கொடியை காரில் ஏற்றிக் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் கருத்துகளை பதாகைகளாக பிடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பூட்டை உடைத்து 200 சவரன் கொள்ளை… மர்ம நபர்கள் கைவரிசை!!!

சென்னை அடுத்த பொன்னேரி பகுதியில் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டில் 200 சவரன் தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

32 வருஷத்தில் 74 முறை விஷப்பாம்பு கடி… இன்றும் உயிர்வாழும் விசித்திர மனிதன்!!!

ஆந்திரமாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழைத் தொழிலாளி சுப்பிரமணியம். இவருடைய 5 வயதில் முதல் முறையாக பாம்பு கடித்தது எனக் கூறுகிறார்.

'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்தார் 

கோயில் கும்பாபிஷேகங்களில் இனி தமிழ் இடம்பெறுமா??? முடிவுக்கு வரவிருக்கும் விவாதம்!!!

தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில் கும்பாபிஷேகங்களிலும் இனி தமிழ் பாடல்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்

மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்!!!

நடிகர் சோனுசூட்டின் மனித நேயத்தைப் பாராட்டி மகிழும் விதமாக ஆந்திராவில் உள்ள ஒரு கல்லூரி நிர்வாகம், அங்குள்ள ஒரு துறைக்கு நடிகர் சோனுசூட்டின் பெயரை வைத்து இருக்கிறது.