சொத்துக் குவிப்பு வழக்கு.......! மாட்டிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்....!

  • IndiaGlitz, [Thursday,July 22 2021]

மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில், இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதிமுக ஆட்சியின் போது, இவர் பணியாற்றிய போக்குவரத்து துறையில் ஏராளாமான ஊழல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழும்பியது. இதையடுத்து வருமான வரித்துறையினர் சென்னை,கரூரில் உள்ள, இவரது வீடுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பரிசோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதால், அவரின் கரூர் வீட்டிற்கு முன்பு காவல் துறையினர் குவிந்துள்ளனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், தனது வருமானத்திற்கு மீறி சொத்துக்களை சேர்த்துள்ளார். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளனர். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பாக போட்டியிட்ட செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.