நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,April 20 2021]

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகான் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். இந்த உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தனர். ஆனால் இதற்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்து இருந்தனர். எனினும் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கொடுத்த நேர்காணலில் தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வடபழனி காவல் நிலையத்தில் கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் அளித்த புகாரின்பேரில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதாவது, கலகம் செய்ய தூண்டி விடுதல், உயிருக்கு ஆபத்தான தொற்று பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், பேரிடர் மேலாண்மைச் சட்டம், தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் நடிகர் மன்சூர் அலிகான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த முன் ஜாமீன் மனுவில் நான் “கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று சொல்லவில்லை. தடுப்பூசியை போடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் சொன்னேன்” என விளக்கம் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

திடீரென ட்ரெண்டாகும் #ResignModi ஹேஷ்டேக்...!

கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அவர்கள் தவறிவிட்டார் என்பதை கூறும் வகையில், திடீரென டுவிட்டரில் #ResignModi ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் டாஸ்மாக் செல்ல 15 கட்டளைகள்… என்னென்ன?

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கு, வெளியூர்- வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இரவு நேரத்தில் வரத் தடை,

வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது...! சத்யபிரதா சாகு....!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். 

புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மூடல்… 39 பேருக்கு கொரோனா பாதித்ததாகத் தகவல்!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர் கடையில் வேலைப் பார்த்த 39 ஊழியர்களுக்கு கொரோனா நோய்ப்பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.