சிபிசிஐடி விசாரணையின்போது கலங்கி அழுத சப் இன்ஸ்பெக்டர்: பரபரப்பு தகவல்

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்த வழக்கை கையில் எடுத்தவுடன் சாத்தான்குளம் சென்ற சிபிசிஐடி போலீசார், முதலில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, ஒரு பிரிவினர் ஜெயராஜ் மொபைல் கடைக்கும், இன்னொரு பிரிவினர் பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கான்ஸ்டபிள் முருகன் ஆகியோர்களிடம் நடத்திய விசாரணையின் போது என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளது

மூன்று பேர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்த போது ’கைது செய்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் ஏன் அவ்வளவு மூர்க்கத்தனமாக அடித்தீர்கள்’ என்று கேட்ட போது தாங்கள் அப்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், கைதானவர்களை சாதாரண கைதி போல தான் தாக்கினோம் என்றும் ஆனால் அவர்கள் உயிர் இழப்பார்கள் என்று சற்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியதாக கூறப்படுகிறது

மேலும் உதவி ஆய்வாளராக இருந்த பாலகிருஷ்ணன் மிகவும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், இந்த சம்பவத்திற்கு பிறகு தனது குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என்று எண்ணி அவர் விசாரணையின் போது கண்ணீர் விட்டு கலங்கியதாகவும் கூறப்படுகிறது

மேலும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த மூன்று பேரையும் சிபிசிஐடி போலீசார் சமாதானப்படுத்தியதோடு, மூவரும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் மூன்று பேரும் சிறைக்குக் கொண்டு செல்லும் வரை மிகுந்த மன அழுத்தத்திலிருந்து இருந்ததாக சிபிசிஐடி தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது

More News

கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்: சிம்ரன்

சிம்ரன் தமிழில் நடித்த முதல் திரைப்படமான 'விஐபி' மற்றும் 'ஒன்ஸ்மோர்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி வெளியானது.

தற்கொலை செய்து கொள்ளலாம்ன்னு இருந்தேன்: யுவன்ஷங்கர் ராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்சங்கர்ராஜாவின் இஸ்லாம் மத மாற்றம் குறித்து சர்ச்சைக்குரிய பல பதிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளிவந்தது.

எல்லை மீறிப் போகும் படுக்கையறை காட்சிகள்: வெப்சீரிஸ்களுக்கு வேட்டு வைக்குமா சென்சார்?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் தற்போது ஓடிடி மூலம் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை பொதுமக்கள்

நான் ஒரு பெண் சிங்கம்: கர்ஜித்த வனிதா விஜயகுமார்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா, சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பீட்டர் பால் முதல் மனைவி அளித்து

போதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது: பாடகி சின்மயி வேதனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன