3வது நாளாக சிபிசிஐடி போலீசார் சோதனை: பொள்ளாச்சி வழக்கில் சிக்கிய ஆதாரங்கள் என்ன?
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பின் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினமும், நேற்றும் திருநாவுக்கரசு வீடு மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சிடிக்கள் உள்பட ஏராளமான ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று 3வது நாளாக சபரிராஜன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்தனர். இதனையடுத்து இன்றே சதீஷ் மற்றும் வசந்தகுமார் வீடுகளிலும் சோதனை நடத்தப்படவுள்ளது. நால்வர் வீடுகளிலும் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து இந்த வழக்கை வலுப்படுத்த போலீசார் தீவிரமாக உள்ளனர்.,
மேலும் திருநாவுக்கரசு உள்பட நால்வர் கைது செய்யப்பட்ட தினத்தன்று பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் கிடைத்த வீடியோக்கள் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அறிக்கை கிடைத்தபின்னரும், திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரித்த பின்னரும் இந்த வழக்கு மேலும் வலுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.