சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்தானது ....! பிரதமர் அறிவிப்பு....!

இந்தியாவில் 12- ஆம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை, ரத்து செய்யப்படவுள்ளதாக பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக சென்ற மாதம் ஏப்ரல்- 14-ஆம், நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு இருந்தது. பிளஸ்-டூ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது. இதுகுறித்து முக்கிய முடிவுகள் ஓரிரு நாட்களில் எடுக்கப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில பிரதிநிதிகளுடன் இன்று மாலையளவில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் என்பது முக்கியம். பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குள் இருக்கும் கவலைகள் முடிவுக்கு வரவேண்டும். மாணவர்கள் மன அழுத்தத்தில் உள்ளபோது, அவர்களை தேர்வுக்கு வருமாறு காட்டாயப்படுத்தக்கூடாது.

அதனால் மாணவர்களின் நன்மை கருதியே, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்துசெய்யப்படுகிறது என மோடி அவர்கள் கூறியுள்ளார்.