செக்க சிவந்த வானம்' 4 நாள் வசூல் சாதனை

  • IndiaGlitz, [Monday,October 01 2018]

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார்கள் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றது.

இந்த படம் வசூல் அளவிலும் முதல் நாளில் இருந்து சாதனை செய்து வரும் நிலையில் தற்போது நான்கு நாட்கள் வசூல் குறித்த தகவலை பார்ப்போம்

இந்த படம் சென்னையில் வியாழன் முதல் ஞாயிறு வரையிலான நான்கு நாட்களில் ரூ.3.78 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் தலா ரூ.1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சென்னையில் வசூல் செய்த ஒன்பதாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு எடுத்துக்காட்டு: ரித்விகாவை வாழ்த்திய பிரபலம்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் ஒருவரான ரித்விகா, ஆரம்பத்தில் அமைதியாக, கலகலப்பின்றி இருந்தார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதே தெரியவில்லை என்று கூட ஒருசிலர் குற்றஞ்சாட்டினர்.

கமல்ஹாசனுக்கு குறும்படம் போட்ட ஓவியா

இந்த இரண்டு சீசனிலும் கமல்ஹாசன் பலருக்கு குறும்படம் போட்டு வந்த நிலையில், அவருக்கு தான் ஒரு குறும்படம் வைத்திருப்பதாக கூறி அந்த படத்தையும் ஒளிபரப்பும்படி கேட்டுக்கொண்டார்.

இன்று மாலை 6 மணிக்கு தளபதி விஜய்யின் 'புரட்சி' ஆரம்பம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்கார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில்

அஜித் குழுவின் முதலிடத்தை தட்டிப்பறித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஆளில்லா வானூர்தி போட்டியில் அஜித் ஆலோசகராக உள்ள தக்சா குழு இரண்டாம் இடத்தை பிடித்தது என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.

மீண்டும் விஜய்சேதுபதியுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் த்ரிஷா

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான '96' திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.