வசூலில் மணிரத்னம் படம் செய்த சாதனை

  • IndiaGlitz, [Monday,October 01 2018]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட், படத்தின் வசூலை அதிகரிக்க உதவியது.

இந்த நிலையில் சென்னையில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் மட்டும் ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் செய்த சாதனை படைத்த இந்த படம் தற்போது தமிழக அளவிலான வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

கடந்த நான்கு நாட்களில் இந்த படம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.3.78 கோடியும், செங்கல்பட்டில் ரு.8.6 கோடியும், கோவையில் ரூ.4.3 கோடியும், நெல்லை-குமரி பகுதியில் ரு.93 லட்சமும் வசூல் செய்துள்ளது

மொத்தத்தில் இதுவரையில் வெளியான மணிரத்னம் படங்களில் இந்த படம்தான் அதிக ஒப்பனிங் வசூலை பெற்று சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஐஸ்வர்யா யாருக்கு மட்டும் இனிமையானவர்? காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ரன்னராக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாவை பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம் புகழ்ந்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் காதலர் கோபியின் அதிர்ச்சி கிரிமினல் பின்னணி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையளார்களின் ஒட்டு மொத்த அதிருப்தியையும் சம்பாதித்த ஒரே ஒரு போட்டியாளர் உண்டென்றால் அது ஐஸ்வர்யா

செக்க சிவந்த வானம்' 4 நாள் வசூல் சாதனை

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார்கள் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றது.

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு எடுத்துக்காட்டு: ரித்விகாவை வாழ்த்திய பிரபலம்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் ஒருவரான ரித்விகா, ஆரம்பத்தில் அமைதியாக, கலகலப்பின்றி இருந்தார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதே தெரியவில்லை என்று கூட ஒருசிலர் குற்றஞ்சாட்டினர்.

கமல்ஹாசனுக்கு குறும்படம் போட்ட ஓவியா

இந்த இரண்டு சீசனிலும் கமல்ஹாசன் பலருக்கு குறும்படம் போட்டு வந்த நிலையில், அவருக்கு தான் ஒரு குறும்படம் வைத்திருப்பதாக கூறி அந்த படத்தையும் ஒளிபரப்பும்படி கேட்டுக்கொண்டார்.