close
Choose your channels

மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' ரிலீஸ் தேதியில் மாற்றம்

Monday, September 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் என நான்கு ஹீரோக்களூம் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைத்தி, மற்றும் டயானா ஆகிய நான்கு ஹீரோயின்களும் இணைந்துள்ளனர்.

இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதியில் ஒரு சிறுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படம் திட்டமிட்ட தேதிக்கு ஒரு நாளுக்கு முன் அதாவது செப்டம்பர் 27ஆம் தேதியே வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.