சிப் வசதியுடன் இ-பாஸ்போர்ட், வந்தே மாதரம் ரயில், டிஜிட்டல் வங்கிகள்: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,February 01 2022]

சிப் வசதியுடன் கூடிய இ-பாஸ்போர்ட், 400 வந்தேமாதரம் ரயில்கள் உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் உடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

One station, One product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்

மேக் இன் இந்தியா திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்

நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது

400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்; 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்

அடுத்த நிதியாண்டில் 25,000 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் புதிதாக அமைக்கப்படும்

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்

சிறுகுறு தொழில்களுக்கான அவசர கடன் உறுதி திட்டம் மார்ச் 2023ம் ஆண்டு வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் செயல்படுத்தப்படும்

தொலைபேசி மூலம் கவுன்சிலிங்க் பெறும் வகையில் தேசிய மனநல சுகாதார திட்டம் தொடங்கப்படும்

ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; 3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ₹48,000 கோடி, வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன

ஒரு வகுப்பு ஒரு கல்வி சேனல் என்ற வகையில் 200 டிவி சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும். இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் கர்ப்பத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய இந்த புதிய திட்டம் உதவும்

நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்

நாடுமுழுவதும் 75 மாவட்டங்களில் வங்கிகளின் 75 டிஜிட்டல் வங்கி யூனிட்கள் நிறுவப்படும்

மின்னணு பாஸ்போர்ட் வரும் நிதியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது. இந்த இ-பாஸ்போர்ட்டில் சிப் உள்பட தொழில்நுட்ப வசதிகள் பல இருக்கும்

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக வரும் நிதியாண்டில் ₹1500 கோடி ஒதுக்கீடு

1 முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்

நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும். 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்

குறைந்த விலையில் வீடுகள் கட்டித்தரப்படும். இதற்காக பிரதமர் வீட்டு வசதி அமைப்பு திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்

மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுவரப்படும். மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்

5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும்

நடைமுறைக்கு ஒவ்வாத 1,486 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது, இது வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி

பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க அனைத்து அமைச்சகங்களும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் பணம் செலுத்தும் திட்டம் தொடங்கப்படும்

ஒரே நாடு, ஒரே பதிவு முறையை கொண்டுவர முடிவு. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரே நாடு ஒரே பதிவுமுறை மூலம் செய்ய முடியும்

More News

திருமணம் செய்து கொள்வதாக  நடிகையை ஏமாற்றிய தயாரிப்பாளர் கைது!

திருமணம் செய்து கொள்வதாக நடிகையை ஏமாற்றி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் உன்னை சந்திக்கின்றேன்: மறைந்த தோழிக்கு உருக்கமான பதிவு செய்த யாஷிகா!

விரைவில் மறுபக்கத்தில் உன்னை சந்திக்கிறேன் என மறைந்த தோழிக்கு உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவை நடிகை யாஷிகா செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நாளை மறுநாள் திருமண தேதியை அறிவிக்கின்றாரா சிம்பு?

 நடிகர் சிம்பு நாளை மறுநாள் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் அவர் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று செய்திகள் கசிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் புதிய லுக்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவர் சமீபத்தில் கர்ப்பம் ஆனதாக செய்திகள் வெளியானது.

எனக்கு இல்லைன்னா எல்லாரும் சாவட்டும்: வனிதா ஆவேசம்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடியில்  ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே சுறுசுறுப்பாகி உள்ளது .