நீட் தேர்வு எப்போது? தேதியை அறிவித்த மத்திய கல்வி அமைச்சர்

  • IndiaGlitz, [Monday,July 12 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மற்றும் அனைத்து மாநிலங்களிலும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால் சமீபத்தில் ஜே.ஈ.ஈ தேர்வு தேதியை அறிவித்த மத்திய அரசு தற்போது நீட் தேர்வுக்கான தேதியையும் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டு என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இது குறித்து கருத்து கூறிய போது ‘நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுக அரசின் கொள்கை என்றும் நீட்தேர்வு ஆய்வு குழு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்றும் மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதில் தவறு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

More News

சைக்கிளுக்கு மாறிய த்ரிஷா: பெட்ரோல் விலை உயர்வு காரணமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா கடந்த 1999ஆம் ஆண்டு 'ஜோடி' என்ற திரைப்படத்தின் மூலம் சிறு கேரக்டரில் அறிமுகமாகி அதன் பின் 2002ஆம் ஆண்டு 'மௌனம் பேசியதே'

சிங்கிளா நீங்க? கவலையை விடுங்க… காதலில் வெல்ல அச்சத்தலான 5 டிப்ஸ்!

ஆதாம், ஏவாள் காலத்தில் இருந்தே பெண்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆண்கள் மெனக்கெடத்தான் செய்கின்றனர்.

போனின் தகாத உறவு....! மதுபோதை.....! கோவையில் குளவிக்கல்லால் கொலை...!

மகள் பலரிடம் தகாத உறவு வைத்திருந்த காரணத்தால், தாயே தலையில் குளவிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரையில் துள்ளல் ஆட்டம், கிளாமர் போட்டோஷூட்: கலக்கும் 'பீஸ்ட்' நாயகி!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சமூகவலைதளங்களில் பிரபலமானவர் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராமில் சுமார் 15 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள்

எனக்கு எந்த லட்சியமும் கிடையாது: விஜய்சேதுபதியின் பிரத்யேக பேட்டி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்து இந்திய மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார் என்பதும். அந்த பிசியிலும் அவர் 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சியை சன் டிவிக்காக