மனிதர்களை போல இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு. மத்திய அரசு ஆலோசனை

  • IndiaGlitz, [Tuesday,April 25 2017]

இந்தியாவில் உள்ளவர்கள் இனி ஆதார் கார்டு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும் ஆதார் கார்டு பல்வேறு விஷயங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இனி சாலைகளில் நடப்பதற்கு கூட ஆதார் கார்டு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நிலையில் மனிதர்களுக்கு மட்டுமின்றி மாடுகளுக்கும் ஆதார் கார்டு திட்டம் விரைவில் வரவிருக்கின்றதாம். நாடு முழுவதும் உள்ள பசுவை பாதுகாக்கும் வகையில் பசுக்களுக்கும் ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டை எண் வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல மாநிலங்களில் பசுமாடுகள் கடத்தி இறைச்சிக்காக கொல்லப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதை அடுத்து பசுக்களை பாதுகாக்க பரிந்துரைகள் தருமாறு மத்திய அரசு சமீபத்தில் கமிட்டி ஒன்றை அளித்தது.

இந்த கமிட்டி பல்வேறு விசாரணைகளுக்கு பின்னர் கொடுத்துள்ள பரிந்துரைகளில் ஒன்றுதான் இந்த அடையாள அட்டை திட்டம். ஆதார் எண் போன்று ஒவ்வொரு மாடுகளுக்கும் ஒரு அடையாள எண் உருவாக்கி அதில் அந்த மாட்டின் பாலினம், வகை, இருக்கும் இடம், எடை, நிறம், வால், தனிப்பட்ட அடையாளம் போன்ற விவரங்களைப் பதிவுசெய்வது என்பதுதான்.

இந்த கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த மத்திய அரசின் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சச்சின் பிறந்த நாளுக்கு ரஹ்மான் கொடுத்த மறக்க முடியாத பரிசு

கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் லிட்டில் மாஸ்டர் சச்சின் தெண்டுல்கர் நேற்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்தது. இந்த நிலையில் சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்' என்ī

ஹாட்டில் இருந்து கூலுக்கு மாறும் 'விஜய் 61' படக்குழுவினர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதையும், இந்த படப்பிடிப்பில் விஜய், வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபப்ட்டது என்பதையும் பார்த்தோம்.

தெர்மோகோலை அந்தம்மா மேல போட்டிருந்தால் உயிர் பிழைத்திருப்பாங்க. ராதாரவி கிண்டல்

தமிழக அமைச்சர் ஒருவர் வைகை அணையின் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோலை போட்டு மூட செய்த முயற்சி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

தெர்மோகோல் அமைச்சரை கலாய்த்த கமல். இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பரபரப்பாக பதிவு செய்து வருகிறார்.

விஜய் சாதாரணமாக நடந்து வந்தாலே மாஸ் ஆக இருக்கும். விஜய்சேதுபதி பட நடிகை

தர்மதுரை' படத்தில் விஜய்சேதுபதிக்கு தோழியாகவும், 'றெக்க' படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கையாகவும், 'கவண்' படத்தில் விஜய்சேதுபதியின் டீமில் ஒருவராகவும் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தங்கை, தோழி வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது புரமோஷன் ஆகி 'திருப்பதிசாமி குடும்பம்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.