close
Choose your channels

துணை முதல்வருக்கு மனைவியாகும் தனுஷ் பட நாயகி!

Wednesday, November 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ’ஆக்சன்’. இந்த படம் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் துணை முதல்வர் ஆர்.கே.எஸ் என்ற முக்கிய கேரக்டர் உள்ளது. இந்த கேரக்டரின் மனைவி கயல்விழி என்ற கேரக்டரில் நடிகை சாயா சிங் நடித்துள்ளதாக படக்குழுவினர் சற்றுமுன் அறிவித்துள்ளனர். இதுகுறித்த டுவீட் ஒன்றையும் படக்குழுவினர் பதிவு செய்துள்ளனர். நடிகை சாயாசிங் ஏற்கனவே தனுஷ் நடித்த ’திருடா திருடி’ உட்பட ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

சுந்தர் சி இயக்கத்தில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், தமன்னா, கபீர் சிங், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, சாயாசிங், ராம்கி, பழகருப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.