தமிழகத்தில் கனமழை… சென்னை வானிலையின் புதிய அறிவிப்பு!!!

 

தென் தமிழகத்தில் வரும் டிசம்பர் 1-4 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. “தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ளள்ளது. இது புயலாக மாறி வரும் 2 ஆம் தேதி இலங்கையில் கரையைக் கடக்கும். பின்னர் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. எனவே தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என சென்னை வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்திலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு உரிய சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், கேரளம், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புயல் பற்றிய எச்சரிக்கை வெளியாவதற்கு முன்பே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 600 பேர் 46 விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இவர்களை உடனடியாக கரைக்கு வருமாறு அம்மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியதை அடுத்து இன்று கரைக்கு வந்து சேருவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

More News

ஆலோசனைக்கு பின் ரஜினியின் முடிவு என்ன? 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

யோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா: ஷிவானி புலம்பல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி, சனம், ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர்களை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்ததாக முதல் புரமோவில் பார்த்தோம்.

5 பைசாவுக்கு 1 கிலோ சிக்கன்… உசிலம்பட்டியில் அலைமோதிய கூட்டம்!!!

கார்த்திகை நாளான நேற்று ஒரு சிக்கன் இறைச்சி விற்பனை நிறுவனம் தனது கிளையை உசிலம்பட்டியில் துவங்கி இருக்கிறது.

டிசம்பர் 15க்குள் தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!!!

தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2 ஆயிரம் மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர்

சிறிதும் யோசிக்காமல் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குக் கொடுத்த வள்ளல்!!!

ஆயிரம் தானங்களிலும் சிறந்த தானம், கல்வி தானம் எனப் பொதுவாக கூறப்படுவது உண்டு.