close
Choose your channels

விஜய்சேதுபதியின் மெகா பட்ஜெட் படம் குறித்த தகவல்

Friday, January 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அருண்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள படத்திற்கு 'சிந்துபாத்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் மற்றொரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். 'பேராண்மை, 'புறம்போக்கு' உள்பட ஒருசில படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களிடம் உதவியாளராக இருந்த வெங்கடகிருஷ்ணா ரோஹ்நாத் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்காக 150 வருட பழமையான சர்ச் செட் ஒன்று தயாராகி வருகிறது. இந்த படம் சர்வதேச பிரச்சனை ஒன்றை அலசவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மூணாறு, கொடைக்கானல், ஊட்டி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் இசக்கிதுரை தயாரிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.