'சந்திரமுகி' பட நடிகையா இவர்? மாடர் உடையில் கலக்கல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,November 29 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவான ’சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் வடிவேலு காமெடி மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு வடிவேலு காமெடி ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஸ்வர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்வர்ணா மாத்யூ என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் ரஜினிக்கும் இடையிலான காமெடி காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

’தாய் மனசு’ என்ற திரைப்படத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு தமிழ் திரையில் அறிமுகமானார் ஸ்வர்ணா, அதன் பின்னர் மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2003ஆம் ஆண்டு வர்கீஸ் என்பவரை திருமணம் செய்த ஸ்வர்ணாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை ஸ்வர்ணா அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஸ்வர்ணா, சமீபத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கியுள்ள நிலையில் ’சந்திரமுகி’ படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த நடிகையா இவர்? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.


More News

நிரூப், வருண் பற்றிய உண்மையை உடைத்த ஐக்கி பெர்ரி: வீடியோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஐக்கி பெர்ரி குறைந்த வாக்குகளின் அடிப்படையில் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

காதலியை கைப்பிடிக்கின்றார் சிஎஸ்கே வீரர்:  திருமண நிச்சயதார்த்த வீடியோ வைரல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

துன்பம் வரலாம்… போகலாம்… வேறலெவல் ரியாக்சனுடன் தத்துவம் பேசும் தமிழ் நடிகை!

தமிழ் சினிமாவில் “மைனா“ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். அதற்குப் பிறகு “தெய்வத்திருமகள்“,

என்னை டீமில் சேர்க்காதீங்க… பாண்டியாவின்  திடீர் கோரிக்கைக்கு என்ன காரணம்?

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக வலம்வரும் ஹர்திக் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு

நீ சொல்வதை செய்ய முடியாது: கேப்டன் நிரூப் உத்தரவை எதிர்க்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டன் டாஸ்கில் இமான் அண்ணாச்சி வெற்றிபெற்ற நிலையில் திடீரென தன்னிடம் உள்ள காயினை பயன்படுத்தி நிரூப் கேப்டனாக மாறியுள்ளார்.