close
Choose your channels

மறைவுக்கு பின் வெளிவரும் கமல்ஹாசன் சகோதரரின் திரைப்படம்

Monday, July 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் கடந்த 2017ஆம் ஆண்டு மரணமடைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த ஒரு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

'அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க' என்று டைட்டிலில் உருவாக்கிய படம் ஒன்றில் சந்திரஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் இரண்டு வயதானவர்களின் காதலை குறிப்பிடும் கதையம்சம் கொண்டது ஆகும்.

ஸ்டீபன் ரங்கராஜன் இயக்கிய இந்தப் படத்தில் சந்திரஹாசன் , டெல்லி கணேஷ் சண்முகசுந்தரம், காத்தாடி ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது பகுதிக்கான டப்பிங்கை சந்திரஹாசன் பேசி முடித்ததாகவும், அதன்பின் அவர் மார்ச் மாதம் மரணமடைந்ததாகவும், அதனால் அவருடைய பகுதி இந்த படத்தில் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதாகவும் இயக்குனர் ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.