close
Choose your channels

'குக் வித் கோமாளி' சீசன் 3: குக்-கள், கோமாளிகள் யார் யார்?

Thursday, April 8, 2021 • தமிழ் Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கனி வின்னராகவும், இரண்டாம் இடத்தை ஷகிலாவும் மூன்றாம் இடத்தை அஸ்வினும் பெற்றதாக செய்திகள் வெளியானது.

இந்த வாரத்துடன் ’குக் வித் கோமாளி' முடிவடைய உள்ளது என்பது இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு பெரும் சோகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ’குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் சீசன் 3 விரைவில் ஒளிபரப்பாகும் என இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக ஒருவரான செஃப் தாமு அவர்கள் பேட்டி ஒன்றில் கூறி இருப்பது ரசிகர்கள் அனைவருக்கும் ஆறுதலாக உள்ளது.

இந்த பேட்டியில் செஃப் தாமு கூறியபோது ’குக் வித் கோமாளி' சீசன் 3 கண்டிப்பாக வரும் என்றும் அடுத்த சீசனில் கோமாளிகள் இப்போது இருப்பவர்கள் தான் இருப்பார்கள் என்றும் ஆனால் ’குக்-கள் பெரும்பாலும் பிக் பாஸ் மற்றும் சீரியல் நட்சத்திரங்களாக இருக்க வாய்ப்பு அதிகம் என்றும் கூறியுள்ளார். மேலும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் சீசன் 3 வரும் என்று அவர் கூறியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz