close
Choose your channels

செக்கச் சிவந்த வானம்: டிரைலர் ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு

Friday, August 24, 2018 • தமிழ் Comments

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் நாளை காலை 10 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜெஷ், அதிதிராவ் ஹைத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.