close
Choose your channels

அப்போ, யுத்தம்தான் முடிவு பண்ணிட்டிங்களா? செக்க சிவந்த வானம் டிரைலர் விமர்சனம்

Saturday, August 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் என நான்கு ஹீரோக்கள் நடித்த 'செக்க சிவந்த வானம்' படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. டிரைலர் முழுவதும் ஆக்சன், ரத்தம், துப்பாக்கி சத்தமாக இருப்பதால் ஆக்சன் பிரியர்களுக்கு இதுவொரு சரியான விருந்தாக இருக்கும்

தொழிலதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், கல்வித்தந்தை, மணல் மாஃபியா வடிவில் கிரிமினல்கள் இருப்பதாக கூறப்படும் வசனத்துடன் டிரைலர் தொடங்குகிறது. மேலும் இந்த டிரைலரில் இருந்து அரவிந்தசாமி, அருண்விஜய், சிம்பு ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளது தெரிய வருகிறது.

அரவிந்தசாமி காட்சிகளில் அனல் தெறிக்கிறது. அருண்விஜய்க்கு வித்தியாசமான கேரக்டர் என்பதும், விஜய்சேதுபதிக்கு போலீஸ் கேரக்டர் என்பதும் தெரிகிறது. ஸ்டண்ட் காட்சிகள், கார் சேஸிங் என படம் முழுவதும் கேமிராமேன் சந்தோஷ் சிவன் புகுந்து விளையாடியிருப்பார் போல.

ரஹ்மானின் அபாரமான பின்னணி இசையும் காட்சி அமைப்புகளின் பிரமாண்டங்களையும் பார்க்கும்போது மணிரத்னம் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான ஒரு பாணியில் படத்தை உருவாக்கியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின் தியாகராஜன், வில்லனாக பிரகாஷ்ராஜ் மற்றும் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், மீடியாவில் வேலை பார்க்கும் அதிதிராவ் ஹைதி என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இந்த படத்தில் உள்ளது. 'அப்போ யுத்தம் தான் முடிவு பண்ணிட்டிங்க' என்று ஜோதிகா அரவிந்தசாமியிடம் கூறுவதை பார்த்தவுடன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது என்னவோ உண்மைதான்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.