1970களில் இருந்த அண்ணா சாலை: விஷால் படத்திற்காக போடப்படும் செட்!

  • IndiaGlitz, [Thursday,April 21 2022]

கடந்த 1970களில் சென்னை அண்ணா சாலை இருந்த அமைப்பில் விஷால் படத்திற்காக செட் போடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷால் நடிக்கவிருக்கும் ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் கதை கடந்த 1970களில் சென்னையில் நடந்த கதை என்பதால் 1970களில் சென்னை அண்ணாசாலை உள்பட பல முக்கிய இடங்களின் செட் சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் அமைக்கப்பட்டு வருகிறது. கலை இயக்குனர் உமேஷ் இந்த செட் அமைக்க பல ஆய்வுகள் செய்து 70களில் இருந்த சென்னை அண்ணா சாலையை அப்படியே நம் கண்முன் கொண்டு வரவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் - இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அரபிக்குத்து' பாடலுக்கு மாஸ் நடனமாடிய பேட்மிண்டன் வீராங்கனை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

உலக நாயகனின் 'விக்ரம்' படம் குறித்த மாஸ் தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்'  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அம்சமா பொண்ணை பார்த்தவுடன் பஞ்சர் ஆனேன்: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' சிங்கிள் ரிலீஸ்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும்

இளையராஜாவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி: என்ன சொன்னார் தெரியுமா?

பிரதமர் மோடியையும் சட்டமேதை அம்பேத்கரையும் ஒப்பிட்டு சமீபத்தில் இளையராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இளையராஜாவிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி பேசியதாக

குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்: மன்னிப்பு கேட்டார் கே.பாக்யராஜ்

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் கே பாக்யராஜ் இன்று காலை பேசிய நிலையில் தனது பேச்சுக்கு தற்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார் .