கொசு மருந்தை அருந்தியதால் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுவன்!

  • IndiaGlitz, [Tuesday,October 12 2021]

சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்துவந்த 3 வயது சிறுவன் தவறுதலாக ஆல் அவுட் மருந்தை அருந்தியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள பம்மல் பகுதியில் வசித்துவருபவர் தமிழரசன். இவருடைய 3 வயது ஆண் குழந்தை கிஷோர். பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த கிஷோர் திடீரென அங்கிருந்த ஆல் அவுட் மருந்தை குடித்துள்ளார். இதை அறிந்த பெற்றோர் உடனடியாக தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவர்கள் எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தனர். ஆனால் எழும்பூர் மருத்துவமனைக்குச் சென்றும் குழந்தை கிஷோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் முதலில் சிகிச்சைக்கு சென்ற தனியார் மருத்துவமனையின் மருத்துவர் கிஷோர் மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் போலி சான்றிதழை வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சங்கர் நகர் போலீசார் சாய் கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர் சுபாஷ் என்பவர் மீது புகார் பதிவு செய்ததோடு அவரை தேடி வருகின்றனர். ஆனால் மருத்துவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

More News

சிம்பிள் மேக்கப்பில் ஸ்ரீதேவியை நினைவூட்டிய ஜான்வி கபூர்… வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் 80கள் முதல் கொடிக்கட்டிப் பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள்… பண்டிகையில் புது கொண்டாட்டம்!

பண்டிகையையொட்டி இந்தியச் சந்தையில் வர்த்தகம் களைக்கட்டி இருக்கிறது.

ஒன்றல்ல, இரண்டல்ல 49 பேர் வெற்றி: விஜய் மக்கள் இயக்க தலைவர் தகவல்!

நடைபெற்ற முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் பிக்பாஸ் ராஜூ ஜெயமோகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ராஜூ ஜெயமோகன், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் நடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சில விஷயங்களை நீங்க தொடக்கூடாது: 'பேர் வச்சாலும்' ரீமிக்ஸ் பாடல் குறித்து குஷ்பு!

கமலஹாசன், குஷ்பு உள்பட பலர் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற 'பேர் வச்சாலும்' என்ற பாடலின் ரீமிக்ஸ் பாடல் சமீபத்தில் சந்தானம் நடித்த திரைப்படத்தில் இடம் பெற்றது