சென்னை ஜவுளிக்கடை அதிபர் குடும்பத்தில் 20 பேருக்கு கொரோனா: 2 பேர் பலி

சென்னையை சேர்ந்த ஜவுளிக்கடை ஒன்றின் உரிமையாளரின் குடும்பத்திலுள்ள 20 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தி நகர் பாண்டி பஜாரில் பிரபல ஜவுளி கடை ஒன்று கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளரின் குடும்பத்தில் 20 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதை அடுத்து இந்த கடையின் உரிமையாளர் தனது கடையை திறந்து வைத்துள்ளார். அப்போது வந்த வாடிக்கையாளர் ஒருவர் மூலம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவருடைய மனைவி மற்றும் மூன்று மகன்கள், மருமகள்கள் பேரக் குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஜவுளி கடை உரிமையாளரின் 69 வயது மனைவியும், அவரது 42 வயது மகனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஜவுளி கடை உரிமையாளரின் தாயார் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டாலும் கடையை திறந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது இந்த ஜவுளிக்கடை குடும்பத்தினரால் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு பாடமாக கருதப்படுகிறது.

More News

பிரபல நடிகரின் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்? தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியால் பரபரப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் ஒரு சில திரையுலக பிரபலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

கவிதை ஆசிரியராக மாறிய தமிழ் ஹீரோ: ப்ரியா பவானிசங்கரின் பதில் கவிதை!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் 'பியார் பிரேம் காதல்' என்ற படத்தின் மூலம் புகழ் பெற்று அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தமிழ் நடிகைகள் என்றால் இளக்காரமா? பாலிவுட்டை கடுமையாக சாடும் பிரபல நடிகை

பொதுவாக தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய திரையுலகில் இருந்து பாலிவுட் செய்பவர்களுக்கு சரியான மரியாதை இருக்காது என்று கடந்த பல வருடங்களாக கூறப்பட்டு வருகின்றன.

பீகார், உபியில் மின்னல், இடி தாக்கியதில் 107 பேர் பலி: கொரோனா நேரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி

பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று இடி மின்னல் தாக்கியதில் 107 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் தனஞ்செயன் சகோதரர் கொரோனாவுக்கு பலி: கோலிவுட் அதிர்ச்சி

கோலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் டாக்டர் தனஞ்செயன் அவர்களின் மூத்த சகோதரர் கொரோனாவால் பலியான செய்தி கோலிவுட் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது