கமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்? மாநகராட்சி விளக்கம்

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டில் சில நிமிடங்களுக்கு முன் மாநகராட்சி ஊழியர்கள் திடீரென கொரோனா ஸ்டிக்கரை ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எழுந்த சர்ச்சையை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்த ஸ்டிக்கரை அகற்றினார்கள் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

இந்த நிலையில் கமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்? என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியை கொண்டு கமல்ஹாசனின் பழைய முகவரியில் மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது’ என்று கூறியுள்ளார்.

கமல் வீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை சென்னை மாநகராட்சி உடனடியாக அகற்றியது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர்.

More News

தனிமைப்படுத்தப்பட்ட இளைஞருக்கு மனநலம் பாதிப்பு: மூதாட்டியை கொன்றதால் பரபரப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்தே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களை மாநகராட்சி நகராட்சி ஊழியர்கள் தனிமைப்படுத்தி

பள்ளி பருவத்திற்கே திரும்பிவிட்டேன்: ராமாயணம் சீரியல் குறித்து பிரபல தமிழ் நடிகை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் நாட்டு மக்களின் பொழுதுபோக்கை கணக்கில்

தனிமைப்படுத்தப்பட்டதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்

தமிழகத்தில் பரவலாக கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள்

கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்ட சென்னை வாலிபர்: ஒரு மகிழ்ச்சியான செய்தி 

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், ஒரு ஆறுதல் செய்தியாக

கேலிக்கூத்தாகிய ஊரடங்கு உத்தரவு: மூன்றாவது நிலைக்கு சென்றுவிட்ட இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவின் இரண்டாவது நிலையில் இருந்த போதே சுதாரித்த இந்திய அரசும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின.