சென்னையில் விசா வாங்க வந்தவருக்கு கொரோனா: 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் போலீஸ்

  • IndiaGlitz, [Wednesday,April 01 2020]

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்திற்கு மார்ச் 15ஆம் தேதி விசா வாங்க வந்த ஒருவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த தேதியில் விசா மையத்திற்கு வந்த 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேட ஆரம்பித்துள்ளனர்

மார்ச் 15ஆம் தேதி சென்னை விசா மையத்திற்கு வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர்களில் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்களாகவே முன்வந்து சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை விசா மையத்தின் முகவரிக்கு சென்று வந்த ஒரு நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த இடத்திற்கு அதே நாளில் அதாவது மார்ச் 15ஆம் தேதி சென்று வந்த அனைவரும் வீட்டிற்குள்ளேயே உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் விபரங்களை எங்களுக்கு தெரிவியுங்கள் தயவுசெய்து இந்த தகவலை பரவலாக பகிருங்கள். அந்த இடத்திற்கு அதே நாளில் சென்ற அனைவருக்கும் இதை தெரியப்படுத்தவும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இதே நாளில் விசா மையத்திற்கு சென்றவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை எண்ணான 044 2538 4520 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

More News

டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா!

டெல்லியில் கடந்த மார்ச் 13 முதல் 15 வரை நடைபெற்ற மத மாநாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில்

தமிழகத்தில் கொரோனா பாதித்த ஐவர் குறித்த தகவல்: அமைச்சர் விஜயபாஸ்கர் 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் இன்னும் மீண்டு வரவில்லை.

டெல்லி மத மாநாடு: நிஜாமுதீன் மவுலானா மீது எஃப்ஐஆர்

கடந்த மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடந்த நிலையில் இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது

தமிழகத்தில் மேலும் 50 பேர்களுக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 124 ஆனதால் அதிர்ச்சி

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது 

கணவனை கொலை செய்த மனைவிக்கு ஜாமீன்: தொலைபேசியில் விசாரணை செய்த நீதிபதி

கணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனைவிக்கு  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொலைபேசியிலேயே விசாரணை செய்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்