ஊரடங்கு உத்தரவு நேரத்திலும் மக்கள் பணியில் துப்புரவு தோழர்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலையில் துப்புரவு பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருக்கும் நிலையில் சென்னை மாநகராட்சியை சேர்ந்த 14,291 துப்புரவு பணியாளர்கள் சென்னை சாலைகளில் உள்ள குப்பைகளை அள்ளி சுத்தம் செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் வருகைப்பதிவேடின்படி 88.2% துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். 1900 பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வரவில்லை என்பதும் இவர்களில் 1013 பணியாளர்கள் அனுமதி பெற்று விடுமுறை எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலத்தில் மட்டுமின்றி எந்த ஒரு இயற்கை பேரிடரின்போதும் விடுமுறை இன்றி மக்களுக்காக உழைத்து வரும் தூய்மை பணியாளர்களின் சேவைக்கு வேறு எந்த சேவையும் ஈடு இணை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

More News

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்வு!

சீனா, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனா  வைரசால் பலியாகி வரும் நிலையில்

தமிழ் நடிகர் டாக்டர் சேதுராமன் உயிரிழந்தார்: சந்தானம் அதிர்ச்சி

தமிழ் நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 37.

வீட்டில் இருந்தால் மட்டும் தீர்வாகாது: கமல்ஹாசன்

கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஊரடங்கு உத்தரவை பொறுமையுடன் கடைப்பிடித்து,

வெளியில் செல்லாதீர்கள்.. நாம் விடுமுறையில் இல்லை..! சச்சின் டெண்டுல்கர்.

இது விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  மக்கள் எல்லோரும் வெளியில் செல்வதை நான் காணமுடிகிறது.

ஏஆர் ரஹ்மான் எடுத்த அதிர்ச்சி முடிவு: ரசிகர்கள் கவலை 

கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே சவாலாக இருந்து வரும் நிலையில் உலகில் உள்ள அனைத்து மக்களும் பயணத்தை தவிர்க்க வேண்டும்