7 வயது சிறுவனுக்கு 526 பற்கள்: சென்னை டாக்டர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,July 31 2019]

சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவனுக்கு 526 பற்கள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு அவ்வப்போது வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளது. மூன்று வயதில் இருந்தே சிறுவனுக்கு இந்த பிரச்சனை இருந்திருந்தாலும் அவனது பெற்றோர் அதனை கவனிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் தற்போது ரத்தம் அதிகமாக வரத்தொடங்கியதை அடுத்து அவனது பெற்றோர் சிறுவனை சவீதா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அந்த சிறுவனின் கீழ் தாடையின் உள்ளே நூற்றுக்கணக்கான பற்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து சர்ஜரி செய்து அனைத்து பற்களையும் வெளியே எடுக்க மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. சுமார் 5 மணி நேரம் நடந்த சர்ஜரிக்கு பின்னர் சிறுவனின் கீழ்தாடையில் இருந்து சிறியதும், பெரியதுமாக 526 பற்கள் அகற்றப்பட்டது. மொத்த பற்களின் எடை 200 கிராம் இருந்ததாக தலைமை மருத்துவர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். இன்னும் மூன்று நாட்களில் அந்த சிறுவன் முழுவதும் குணமடைந்துவிடுவான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். உலகிலேயே ஒரு மனிதருக்கு அதிக பற்கள் அகற்றப்பட்டது இந்த சிறுவனுக்குத்தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்

More News

13 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணைவாரா ஆஸ்கார் நாயகன்?

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'தல 60' படத்தின்

உணவுக்கு மதம் கிடையாது: ஜொமைட்டோ பதிலடிக்கு வாடிக்கையாளர்கள் ரியாக்சன்

ஆன்லைனில் உணவு சப்ளை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஜொமைட்டோ. இந்த நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்த ஒருவர் தன்னுடைய உணவை இந்து அல்லாத ஒருவர் டெலிவரி செய்தால்

நான் தான் உண்மையான 'அண்ணாமலை' பால்காரன்: எச்.ராஜா

நடிகர் ரஜினிகாந்த் ரீல் வாழ்க்கையில் மட்டுமே அண்ணாமலை என்றும் மாட்டுத்தொழுவத்திலேயே பிறந்து வளர்ந்த தான் நிஜ வாழ்க்கையில் அண்ணாமலை என்றும், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

உனக்கு மட்டுமா பிரேக்-அப்? அவளுக்கும் ஆகும்! சாக்சிக்கு ஆறுதல் சொல்லும் தோழிகள்

இன்று நடைபெற்ற மொட்டை கடிதம் டாஸ்க்கில் சாக்சியுடன் கூடிய உறவு குறித்து விளக்கம் அளித்த கவின், சாக்சிக்கும் எனக்கும் எந்தவிதமான உறவும் இப்போதைக்கு இல்லை

கவினுக்காக வாக்குவாதத்தில் லாஸ்லியா-சாக்சி

பிக்பாஸ் வீட்டில் காதல் இளவரசனாக கடந்த சில வாரங்களாக வலம் வந்து கொண்டிருந்த கவின் தற்போது பரிதாபமாக தேவதாஸ் போல் உள்ளார்.