சீனாவில் இருந்து இந்தியாவுக்கு தனியாக விமானத்தில் வந்த சென்னை மாணவி!

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் மிக பயங்கரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் சீனாவுக்குச் செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சீனாவில் இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சீனாவில் மருத்துவ படிப்பு படித்து வரும் சென்னை மாணவி ஒருவர் இந்தியாவிற்கு திரும்பி உள்ளார். அவர் வந்த விமானத்தில் அவர் மட்டுமே தன்னந்தனியாக பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வரும் சென்னையைச் சேர்ந்த வேலம் என்ற மாணவி, கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் விமான நிலையத்தில் காத்திருந்த போது இந்தியா செல்லும் விமானத்தில் செல்ல அவருக்கு டிக்கெட் கிடைத்தது. ஆனால் அந்த விமானத்தில் அவரை தவிர வேறு எந்த பயணியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு பயம் இருந்தாலும் விமானத்தை ரத்து செய்யாமல் அந்த மாணவிக்காக விமானம், சிங்கப்பூர் வழியாக இந்தியா வந்தது. தன்னந்தனியாக விமானத்தில் பயணம் செய்த அந்த மாணவி, தனது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்தாலும் விமானத்தை ரத்து செய்யாமல் அந்த பயணியின் பாதுகாப்பை கருதி விமானத்தை இயக்கிய அந்த விமான நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

தனுஷ் படத்தில் இணைந்த அமலாபால்!

தனுஷ் மற்றும் அமலாபால் இணைந்து 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தனுஷின் ரீமேக் படம் ஒன்றில் அமலாபால்

சிம்பு-வெங்கட்பிரபு மீண்டும் இணையும் படம் குறித்த தகவல்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது.

கொழுந்தியாள் ஆபாச படத்தை வைத்து மனைவியை மிரட்டிய கணவர்: சென்னையில் பரபரப்பு

சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது கொழுந்தியாள் ஆபாச படத்தை வைத்து மனைவியை மிரட்டியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மொபைல் போன், கம்யூட்டர்களையும் தாக்கும் கொரோனா வைரஸ்

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால் 200க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்

டப்பிங் சங்க தேர்தல்: சின்மயி அணியில் இணைந்த நாசர்!

டப்பிங் யூனியன் சங்கத்திற்கு வரும் பிப்ரவரி 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ராதாரவி அணி மற்றும் சின்மயி தலைமையிலான