கணவனை கொலை செய்த மனைவிக்கு ஜாமீன்: தொலைபேசியில் விசாரணை செய்த நீதிபதி

கணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனைவிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொலைபேசியிலேயே விசாரணை செய்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தணிகைவேலன் என்பவர் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரை அவருடைய மனைவி ரேகா தான் கொலை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் தனது 19 வயது மகளையும் 14 வயது மகனையும் கவனிக்க வேண்டும் என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் ரேகா ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தொலைபேசி மூலம் விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ராஜமாணிக்கம் அவருக்கு ஏப்ரல் 27 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

More News

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் அடித்து கொலை: ஒரு அதிர்ச்சி சம்பவம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உடனடியாக சுகாதாரத் துறைக்கு

மகனுக்கு வித்தியாசமாக முடிவெட்டிய பிரபல இயக்குனர்

ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ முதல் வேலையாக அனைவரும் சலூன் முன் நிற்பார்கள். 21 நாட்கள் முடிவெட்டாமல்

கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது தென்கொரியா: எப்படி தெரியுமா?   

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பெரும் ஆபத்தில் சிக்கி தவித்திருக்கும் நிலையில் தங்கள் நாட்டில் கொரோனா நோயாளிகளே இல்லை என தென்கொரியா அறிவித்துள்ளது

"Patient Zero" கொரோனாவால் பாதித்த முதல் நோயாளி இவர்தான்!!!

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உலகச்சுகாதார நிறுவனத்தால்

பிரதமர் நிவாரண நிதிக்கு மோடியின் தாயார் கொடுத்த தொகை

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பெரும் மனித உயிரிழப்புகளும் பொருள் இழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனாவை எதிர்த்து போரிட