விஷால் மீது சிம்பு தொடர்ந்த வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு 

  • IndiaGlitz, [Wednesday,December 11 2019]

சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன் என்பவர் தயாரித்த ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற திரைப்படத்திற்காக சிம்புவுக்கு ரூபாய் 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், ஆனால் ரூபாய் ஒன்றரை கோடி மட்டுமே முன்பணம் கொடுக்கப்பட்டதாகவும் மீதி பணத்தை தனக்கு பெற்று தரும்படியும் சிம்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். அப்போது நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்தவர் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த மனு மீது நடிகர் சங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இதுகுறித்து வழக்கு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் சிம்பு தொடர்ந்தார். இந்த வழக்கில் நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷாலையும் அவர் எதிர் மனுதாரராக சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் விசாரணைக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, ‘நடிகர் சங்கத்தின் செயலாளராக தற்போது விஷால் இல்லை என்றும், தமிழக அரசு தனி அதிகாரியை நியமனம் செய்துள்ளதாகவும் விஷால் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விஷாலுக்கு பதிலாக நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி நடிகர் சிம்புக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஜனவரி 3ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று முதல் தொடங்கும் 'பொன்னியின் செல்வன்': இரு முக்கிய நடிகர்கள் தாய்லாந்து விரைவு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு இன்று முதல்

"அவர்களின் எல்லா செயல்களிலும் அகங்காரம் மட்டுமே இருக்கிறது", பா.ஜ.க.வை சாடிய பி.சி.ஸ்ரீராம்

பா.ஜ.க அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டுள்ளார்.

வற்றியது.. உலகப் புகழ் பெற்ற விக்ட்டோரியா நீர் வீழ்ச்சி. ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வறட்சி.

தெற்கு ஆப்பிரிக்காவின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய மிகப்பெரிய சுற்றுலாத் தலம், இன்று நூற்றாண்டு காணாத வறட்சியில் சிக்கிச் சிதைந்துகொண்டிருக்கிறது

குயின், தலைவி திரைப்படங்கள்: தீபா தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற டைட்டிலில் இயக்குனர் விஜய் திரைப்படமாகவும், 'குயீன் என்ற டைட்டிலில்

இதுவரை கைலாசாவிற்கு விண்ணப்பித்திருப்பவர்கள் இவ்வளவு பேரா..!

12 லட்சம் பேருக்கு மேல் கைலாஷாவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள் என நித்தியானந்தா தனது வீடியோவில் கூறியுள்ளார்